"பவரான பாஸ்போர்ட்.." அடித்து நொறுக்கும் சிங்கப்பூர்.. அது சரி அப்போ இந்தியா எங்கே?
சிங்கப்பூர்: 2026ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதிலும் சிங்கப்பூர் தான் முதலிடத்தில் இருக்கிறது. எப்படி இந்த லிஸ்டில் சிங்கப்பூர் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. சிங்கப்பூர் பாஸ்போர்ட் எப்படி இந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
பொதுவாக எந்தவொரு நபரும் வெளிநாட்டிற்குச் செல்லும்போது தேவையான அடிப்படை ஆவணம் என்றால் அது பாஸ்போர்ட் தான். அதேநேரம் உலகின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்டிற்கும் ஒரு மாதிரியான பவர் இருக்காது. ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டிற்கும் பவர் மாறுபடும்.

விசா பட்டியல்
அதாவது விசா இல்லாத அணுகல் என்பது ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டை பொறுத்து மாறும். எந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு அதிகபட்ச நாடுகளில் விசா இல்லாத அனுமதி தரப்படுகிறதோ அந்தளவுக்கு அது வலிமையான பாஸ்போர்ட் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த வலிமையான பாஸ்போர்ட் லிஸ்ட்டை ஒவ்வொரு ஆண்டும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிடும். அதன்படி 2026ம் ஆண்டுக்கான சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர்
இதில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன. இந்த நாட்டு மக்கள் மொத்தம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். அடுத்து 186 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தோடு டென்மார்க், லக்ஸம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் 185 நாடுகளுக்கான விசா இல்லாத பயணத்தோடு 4வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹங்கேரி, போர்ச்சுக்கல், ஸ்லோவாக்கியா, அமீரகம், ஆகிய நாடுகள் 184 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தோடு 5ம் இடத்தில் வருகிறது.
என்ன காரணம்
இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க சில முக்கிய காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில் ஒன்றாகும். சிங்கப்பூர் குடிமக்கள் பிற நாடுகளுக்குச் செல்லும்போது, அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேற வாய்ப்பில்லை என்று பிற நாடுகள் கருதுகின்றன. இதுவே பிரதானக் காரணமாகும்.
அதேபோல சர்வதேச அரசியல் மோதல்களில் சிக்காமல், அனைத்து நாடுகளுடனும் சிங்கப்பூர் நடுநிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. மேலும், சிங்கப்பூர் அரசு உலகின் பிற நாடுகளுடன் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது. பல நாடுகளுடன் பரஸ்பர விசா விலக்கு ஒப்பந்தங்களையும் சிங்கப்பூர் செய்துள்ளது. இதன் காரணமாகவே சிங்கப்பூர் வலிமையான பாஸ்போர்ட்டாக உள்ளது.
இந்தியா
இந்த லிஸ்டில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த லிஸ்டில் 85வது இடத்திலிருந்த நிலையில், இப்போது 5 இடங்களை முன்னேறி 80வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தான் 98வது இடத்திலும், பங்களாதேஷ் 95வது இடத்திலும், நேபாளம் 96வது இடத்திலும் உள்ளன. இலங்கை லிபியாவுடன் இணைந்து 93வது இடத்தில் உள்ளது. சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என உள்நாட்டு சிக்கல்கள் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
-
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications