உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரதமர் யார்? கூடுதலாக ரூ.11 கோடி சம்பள உயர்வாம்!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: உலகிலேயே இப்போது சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தான் அதிகம் சம்பாதிக்கும் பிரதமராக இருக்கிறார். அவருக்கு இந்திய மதிப்பில் இப்போது ஆண்டுக்கு ரூ.16 கோடி சம்பளமாக வழங்கப்படும் நிலையில், இப்போது அவரின் ஊதியம் உயர்த்தப்படுகிறதாம். சுமார் ரூ.11 கோடி அவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள முக்கியமான நாடு சிங்கப்பூர். பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ரீதியாக பார்த்தால் சிங்கப்பூர் ஒரு குட்டி நாடு தான். ஆனால், பொருளாதார ரீதியாக உலகில் மிகவும் வலிமையான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது. மேலும், ஊழல் இல்லாத நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது.

Singapore Prime minister salary

சிங்கப்பூர் பிரதமர்

இதற்கிடையே சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு சம்பளம் விரைவில் 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.27 கோடியாக உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை மாற்றியமைக்கும் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர்களின் ஊதியம் உயர்த்தப்படுகிறது.

சிங்கப்பூர் பிரதமராக தற்போது லாரன்ஸ் வோங் ஆண்டுக்கு 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர், அதாவது சுமார் ரூ.16 கோடி சம்பளமாக பெறுகிறார். புதிய முறையில் அமைச்சர்களுக்கான சம்பள கணிசமாக உயர்த்தப்படுகிறது.

எப்படி

புதிய நடைமுறையின் கீழ், ஜூனியர் அமைச்சரின் ஆண்டு சம்பளம் 1.1 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் இருந்து 1.8 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.27 கோடி உயர்கிறது. அதேநேரம் இந்த சம்பள உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வராதாம். அக்டோபர் 15ம் தேதி முதல் படிப்படியாக சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஒவ்வொரு அமைச்சரின் பொறுப்பு மற்றும் பெர்பாமன்ஸை பொறுத்து இந்த சம்பள உயர்வு மாறுபடும்.

பிரதமரின் சம்பளம்

பிரதமரின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை அவர் நேரடியாக தெரிவிக்கவில்லை. ஆனால், 9 சதவீத உயர்வு வழங்கப்பட்டால், அவரது தற்போதைய 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் சம்பளம் சுமார் 2.4 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயரும். இருப்பினும், வேறு சில விதிமுறைகளையும் சேர்த்து கணக்கிட்டால் அவரது ஆண்டு சம்பளம் 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலரை எட்டுமாம். அதாவது இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.27 கோடியாகும். அதேநேரத்தில் பிரதமர் வோங் தனது சம்பள உயர்வு மூலம் கிடைக்கும் முழு தொகையையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்

அமைச்சர்களின் சம்பளம் நீண்ட காலமாக தனியார் துறைகளில் கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளதாக வோங் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு திறமையான நபர்களை ஈர்க்க வேண்டுமானால் சம்பளத்தை உயர்த்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2025 தேர்தலுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை அரசியலுக்கு வருமாறு நான் அழைத்தேன். அவர்களில் சிலர் என்னைவிட பல மடங்கு அதிக சம்பளம் பெற்று வந்தனர்.

அவர்கள் வெளிப்படையாக சம்பளம் குறைவு காரணமாகவே அரசியலுக்கு வரவில்லை என சொல்லவில்லை என்றாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அரசியலில் ஊதியம் குறைவாக இருப்பதை நான் அப்போதே உணர்ந்தேன். இதன் காரணமாகவே ஊதியத்தை உயர்த்த முடிவு செய்தேன். அரசியல் தலைவர்களின் ஊதியம் தொடர்பான விவகாரத்தை சிங்கப்பூர் வெளிப்படையாக கையாள்கிறது. அரசியல் தலைவர்கள் வாங்கும் சம்பளத்தை மறைக்கக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு" என்றார்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+