மலைப்பாம்பு 10 அடி நீளம் சிவகங்கையில்.. பாம்பு வாயில் என்ன இருந்தது தெரியுமா? ஆடிப்போன சிங்கம்புணரி
சிவகங்கை: சிவகங்கையில் மலைப்பாம்பு வந்துள்ளது.. சில நாட்களுக்கு முன்புதான் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் வாழைத்தோட்டம் கிராமம் அருகே மலைப்பாம்பு ஊர்ந்து நகர்ந்து சென்றுள்ளது.. நீண்ட நேரமாக சாலையோரத்திலேயே படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தது.. அந்த வழியாக ஏதாவது வாகனங்கள் வந்தால், திடீரென எழுந்து நின்று ஒய்யாரமாக போஸ் கொடுத்தது நினைவிருக்கலாம். இப்போது சிவகங்கையிலும் மலைப்பாம்பு ஒன்று பீதியை தந்துவிட்டது.
குளிர்காலம் நடந்து வரும்நிலையில் பாம்புகளின் நடமாட்டங்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து வருகிறது.. இதற்கு மலைப்பாம்பும் விதிவிலக்கல்ல..

விஷமில்லாத இந்த பாம்பு மனிதர்களை தாக்கக்கூடியவை.. ஆனால் உடல் வலிமை அதிகம் இருப்பதால், ஆபத்து இல்லை என்று முழுமையாக சொல்ல முடியாது. மலைப்பாம்பு கடித்தால் விஷம் ஏறாது.. ஆனால் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் போது அல்லது அச்சம் ஏற்பட்டால், மனிதரை சுற்றி இறுக்கியே மூச்சை அடக்க முடியுமாம்..
மலைப்பாம்புகள்
மலைப்பாம்புகள் காடுகள், மலைப்பகுதிகள், புதர்கள், விவசாய நிலங்களுக்கு அருகில் வாழ்ந்து வரும் நிலையில், உணவு தேவைப்படும்போது மட்டுமே மனித குடியிருப்புகளுக்கு அருகே வருகின்றனவாம்..
பெரும்பாலும், எலி, முயல், அணில், கோழி, வாத்து, ஆட்டு குட்டி, குட்டி மான் போன்ற விலங்குகளை இந்த மலைப்பாம்புகள் இரையாக தேடி உண்கின்றன.. சிலசமயம் நாய், பன்றி குட்டிகளையும் வேட்டையாடும்.
குளிர் காலத்தில் அசையாமல்..
சுருக்கமாக சொல்லப்போனால் முழு உயிரினத்தையும் ஒரே முறையாக விழுங்கும் தன்மை இதற்கு உண்டு.. அதனால்தான் மனிதர்கள் இதன் இயல்பான உணவாக இல்லாவிட்டாலும் சிறு குழந்தைகள் தனியாக இருந்தால் இத்தகைய பாம்புகளால் அபாயம் ஏற்படலாம்.
அதிலும், பகல் நேரத்தில் மறைந்தும், இரவு நேரத்தில் அதிகமான நடமாட்டத்தில் இருக்கும் என்று பாம்பு பிடி வீரர்கள் கூறுகிறார்கள்..
குளிர்காலத்தில் மலைப்பாம்புகள் அதிகமாக அசையாமல் பாதுகாப்பான இடங்களில் தங்கிவிடும்.. உடல் வெப்பத்தை தாமே உருவாக்க முடியாததால், குளிர் அதிகமான நேரங்களில் மண்ணுக்குள், குகைகள், பாறை இடைவெளிகளில் ஒளிந்து கொள்கின்றன.
கோழியை விழுங்கிய 10 அடி நீள பாம்பு
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. அதிலும் இது தொடர்பான வீடியோ, காண்போரை கதிகலங்க வைத்து வருகிறது.
சிங்கம்புணரி அருகே உள்ள காலாபூர் கிராமத்தில் திடீரென மலைப்பாம்பு ஒன்று விவசாய வயலில் புகுந்துவிட்டதாம்.. சேவுகபெருமாள் என்பவருக்கு சொந்தமான வயல் பகுதியில் தொழிலாளர்கள் இன்று வழக்கமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருநத்னர்..
அப்போது கோழி ஒன்று அலறியபடி சத்தம் எழுப்பியிருக்கிறது.. இதனால் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பதறிப்போய் கோழிக்கு என்ன ஆச்சோ? என்று சத்தம் வந்த பகுதியில் சென்று பார்த்துள்ளனர்.
புதரில் பெரிய மலைப்பாம்பு
அப்போது சுமார் 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. கோழியை முழுவதுமாக அந்த மலைப்பாம்பு விழுங்கிவிட்டதாம்.. மேலும் முழுமையாக கோழியை விழுங்கியதால் அங்கிருந்த நகர முடியாமல், அருகிலிருந்த புதருக்குள் சென்று மலைப்பாம்பு சிக்கி கொண்டுள்ளது..
உடனடியாக இதுகுறித்து சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தந்தனர்.. சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. புதருக்குள் சிக்கியிருந்த மலைப்பாம்பை மிகுந்த கவனத்துடன் மீட்டு, எந்தவித சேதமும் ஏற்படாமல் உயிருடன் பிடித்தனர். பிறகு அந்த மலைப்பாம்பு சாக்குப் பையில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, எஸ்.வி.மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மலைப்பாம்பு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மலைப்பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த கோழி பாவம்!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications