சிவகங்கை அருகே காரும் வேனும் மோதல்! ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் உள்பட 4 பேர் பலியான சோகம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே சுற்றுலா வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மலேசியாவை சேர்ந்த 17 பேர் தமிழகத்திற்கு வந்த ராமேஸ்வரத்திற்கு ஒரு டெம்போ டிராவலரில் வாகனத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். தஞ்சையில் இருந்து தேவக்கோட்டை ஆண்டாபூரணியை நோக்கி ஒரு காரில் 6 பேர் பயணித்தனர். தேவக்கோட்டை அருகே மார்சாம்பட்டி மேம்பாலம் அருகே காரும் வேனும் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரு சிறுமிகளும் இரு ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தால் ஆண்டாபூரணி பகுதியில் சோகம் நிலவி வருகிறது. மலேசியாவிலிருந்து வந்தவர்கள் காயமடைந்து தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தேவக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications