சிவகங்கை தாசில்தார் பெண்ணுடன் ஓட்டலில் உல்லாசம்... வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் அம்பலமான வில்லங்கம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றும் ராஜரத்தினம் என்பவர் பெண் ஒருவருடன் தனியார் விடுதி அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் காரணமாக இந்த வில்லங்க வீடியோ வெளியானதாக சொல்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக இருப்பவர் ராஜரத்தினம், இவ்ர் ஒரு பெண்ணுடன் ஓட்டல் அறையில் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

A video of Sivagangai Tahsildar together with a woman in a hotel has been released

சம்பந்தப்பட்ட உல்லாச வீடியோவை அரசு அதிகாரியான அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. தாசில்தாரின் வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுன் லோட் செய்து, வீடியோவை பலரும் பகிர்ந்து சமூக வலைதளங்களில் வருவதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வீடியோவில் சிக்கிய அதிகாரிக்கு சிக்கல் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். ஆபாச வீடியோவை பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த குற்றத்திற்காக தாசில்தார் ராஜரத்தினம் மீது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தானாக முன்வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில், இதுபோன்ற விவகாரங்களில் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் , சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள் முன்னதாக இந்த அரசு அதிகாரி பணியாற்றிய இடங்களில் இது போன்ற பாலியல் புகார்களில் சிக்கியவர் என கூறப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பணியாற்றி வந்த போது, தாசில்தார் ராஜரத்தினம் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+