அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு அதிமுக - பாஜக திருப்புவனத்தில் போராட்டம்
சிவகங்கை: திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 போலீர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு அதிமுக மற்றும் பஜாகவினர் இணைந்து திருப்புவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை திருட்டுப் போனது தொடர்பாக, அக்கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்தை (வயது 28) விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனையும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு அதிமுக மற்றும் பஜாகவினர் இணைந்து திருப்புவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications