"53 வயசாகியும் இன்னுமா அது தெரியலை".. கண்ணகி மீது கொந்தளித்த கணவன்.. கோடாரியால் ஒரே வெட்டு..!
கோடாரியால் மனைவியை வெட்டிய கணவன் கைதானார்
சிவகங்கை: இப்பதான் அம்மாவை கொன்னுட்டு ஜெயிலுக்கு போனார் பாண்டி.. மறுபடியும் ஜாமீனில் வந்து மனைவியை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போய்விட்டார்.. அந்த அளவுக்கு முரட்டு கோபம் நிறைந்தவர் மிஸ்டர் பாண்டி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்தான் பாண்டி.. 68 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. இவரது மனைவி இறந்துவிட்டார்.. அதனால், 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. அவர் பெயர் கண்ணகி.. 53 வயசாகிறது.
21 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.. பாண்டிக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்கிறது.. நிறைய கோபம் வருமாம்.. ஆத்திரம் கண்ணை மறைக்குமாம்.. இப்படித்தான், முதல் மனைவியின் மூக்கையும் காதையும் இவர் அறுத்துவிட்டாராம்.. அந்த கேஸ் இவர் மீது இருக்கிறது.

கொலை
இப்படித்தான் 2019-ல் அவர் அம்மாவுடன் சண்டை போட்டுள்ளார்.. தண்ணி அடிக்க பணம் தராததால், அம்மாவை அடித்தே கொன்றுவிட்டார்.. இவ்வளவு காலம் ஜெயிலில் இருந்தவர், சில மாசத்துக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டுவாசலில் உள்ள அம்மிக்கல்லில் கண்ணகி தேங்காய் சட்னி அரைத்து கொண்டிருந்தார்.

தேங்காய் சட்னி
அதை பார்த்ததும் பாண்டிக்கு டென்ஷன் ஆகிவிட்டது.. "எதுக்கு தேங்காய் சட்னி அரைக்கிறே? உன்னை மீன்குழம்பு தானே வைக்க சொன்னேன்" என்று கேட்டுள்ளார்.. மீன்குழம்பு சரியா வரலை என்று கண்ணகி சொன்னதும், இவ்வளவு வயசாகியும் மீன் குழம்பு வெக்க தெரியலையா? என்று கேட்டு வம்பிழுத்துள்ளார்.. ஒருகட்டத்தில் இவர்களின் சண்டை அதிகமானது.. வாக்குவாதம் நீடித்தது..

மீன் குழம்பு
ஆத்திரம் அடைந்த பாண்டி திடீரென வீட்டிற்குள் ஓடினார்.. அங்கிருந்த கோடாரியை எடுத்து வந்து, கண்ணகியின் தலையில் ஒரே போடாக போட்டார்.. இதில் கண்ணகிக்கு மண்டை உடைந்தது.. ரத்தம் கொட்டியது.. வலியால் அலறி துடிக்கவும், அக்கம்பக்கத்தினர் வைரந்து வந்து, கண்ணகியை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. இந்த தகவல் அறிந்து காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்து பாண்டியை கைது செய்துள்ளனர்.. ஆத்திரித்தில் கோடாரியை எடுத்து வெட்டி விட்டேன் என்று வாக்குமூலம் தந்துள்ளார்.

கோடாரி
இப்போது மறுபடியும் ஜெயிலுக்கு போய்விட்டார் பாண்டி.. ஆஸ்பத்திரியில் கண்ணகி சீரியஸாக இருக்கிறாராம்.. தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. மீன்குழம்பு வைக்காத மனைவியை, மீன்குழம்புக்கு பதிலாக தேங்காய் சட்னி அரைத்த மனைவியை, குடிகார கணவன் கொடரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications