நோட்டு போட்டு தீபாவளி வசூல்.. அசிங்கமாக சிக்கிய தீயணைப்புத் துறை அலுவலர்கள்
சிவகங்கை: தீபாவளிக்கு நெருங்கி வரும் நிலையில், காரைக்குடியில் உள்ள கடைகளுக்குச் சென்று தீபாவளி வசூலில் ஈடுபட்டு பணத்தை இருசக்கர வாகனங்களிலும், அலுவலகத்திலும் பதுக்கி வைத்திருந்த தீயணைப்புத் துறையினர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என்று ஊரே களைகட்டும். கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். மளிகை கடை முதல் துணிக் கடை வரை ஒவ்வொரு கடையிலும் அமோக விற்பனை நடைபெறும். இது ஒருபுறமிக்க ஒரு சில கும்பல்கள் தீபாவளி வசூலையும் தொடங்கிவிடும். இதனைத் தடுப்பதற்காகவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவ்வப்போது ரெய்டும் விடப்படும்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் அங்கிருந்து கணக்கில் வராத ஒன்றே கால் லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், காரைக்குடி தீயணைப்புத் துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கி வருவதாக வருவாய்த் துறை அதிகாரி காசிநாததுரை என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின்பேரில் விசராணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது, தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் எனும் அதிகாரி தீபாவளி வசூலை முடித்துக் கொண்டு அந்தப் பணத்துடன் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காரைக்குடி அரசு மருத்துவமனை அருகே நின்று அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த செல்வத்தை பிடித்து சோதனை நடத்தினர். அவரிடம் பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுதது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்வத்தை அழைத்துக் கொண்டு தீயணைப்புத் துறை அலுவலகத்துக்குச் சென்றனர்.
செல்வம் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்யப்பட்டது. அப்போது, அந்த வாகனத்தின் இருக்கையின் அடியில் கணக்கில் காட்டப்படாத எந்தவொரு ஆவணமும் இல்லாமல் 60 ஆயிரம் ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பணத்துடன் எந்தெந்த கடையில், யாரிடம் எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது போன்ற லிஸ்ட் கொண்ட 2 நோட்டுகளையும் கைப்பற்றினர்.
மேலும், அந்த நோட்டுகளில் சந்தேகம் வராமல் இருக்கும் வகையில், தீயணைப்புத் துறை அலுவலகத்தின் முத்திரையை பதிவிட்டிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீத கிருஷ்ணன் என்பவர் உத்தரவின்பேரில் கடைவீதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் உள்ள கடைகளுக்குச் சென்று நோட்டு போட்டு தீபாவளி பணம் வசூலித்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, செல்வம் வைத்திருந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். அதேபோல தீயணைப்பு நிலையத்தில் அனைத்து அலுவலர்களிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அலுவலகத்தில் இருந்து ஓய்வறையில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அந்தப் பணத்தையும் கைப்பற்றினர்.
மேலும், அந்த அலுவலகத்தில் இருந்தும் லிஸ்டுடன் கூடிய வசூல் விவரங்கள் கொண்ட நோட்டையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications