அறிவாலய வாசலில் செக்யூரிட்டியா? பாஜகவை வீழ்த்த கழிவறையைக் கூட கழுவ தயார்: சிவகங்கையில் மநீம அதிரடி
சிவகங்கை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டமும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரும் 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (SIR - Special Intensive Revision) கொண்டுவந்துள்ளன.. இதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த படிவங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, மாற்றம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையானது, ஜனநாயக முறையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சார் எதிர்க்க காரணம்
காரணம், வெளிமாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கும் முயற்சியே இந்த அவசர திருத்தப் பணியாகும்.. வெளிமாநிலத்தவருக்கு இங்கே வாக்குரிமை கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், கட்சிகள் ஆகியவை அவர்களுக்குத் தெரியாது. இதனால், அவர்கள் தேசியக் கட்சிக்கே வாக்களிக்கக்கூடும்..
பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் பலர் நீக்கப்படலாம். தகுதியில்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இந்த நடைமுறையில் முறைகேடு மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக திமுக குற்றஞ்சாட்டியிருப்பதுடன், சுப்ரீம்கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதுமட்டுமல்ல, எதற்காக அவசரமாக சிறப்பு தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்? தமிழகத்தில் 8 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், ஒரு மாதத்திற்குள் எப்படி சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ள முடியும்? தேர்தல் ஆணையம் உத்தரவிட்டபடி ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை நேரில் எப்படி செல்ல முடியும்? என்பன போன்ற கேள்விகள் இந்த விவகாரத்தில் எழுந்துள்ளன..
சிவகங்கையில் மநீம
எனவேதான் இன்றைய தினம் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றன..
அந்தவகையில், சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் எஸ்ஐஆரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழிவறையை கழுவ தயார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, மநீம, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த்உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் பெரியார் குணா ஹாசன் கலந்து கொண்டு பேசும்போது, சென்னை அறிவாலயத்தில் மக்கள் நீதி மையத்தினர் செக்யூரிட்டி வேலை செய்கிறார்கள் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், பாஜகவை வீழ்த்துவதற்கு தேவைப்பட்டால் நாங்கள் கழிவறையை கூட கழுவத்தயாராக இருக்கிறோம் என்றார்.
கமலின் நிலைப்பாடு
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (Special Intensive Revision) ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுத்தப்படுகிறது? அவசரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்களாட்சியின் அடித்தளமான வாக்குரிமையை அச்சுறுத்தக் கூடும்..
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ளாமல், நிதானமாகவும், முழுமையாகவும் இப்பணியை 2026 தேர்தலுக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு" என்று மநீம தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இன்றைய தினம் எஸ்ஐஆருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மநீம பங்கேற்று நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications