Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்சிட் போல் சொன்னதை விட பாஜக அதிகம் ஜெயிக்கும்.. ஜிகே வாசன்.. அதிமுக பற்றி இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், கருத்துக்கணிப்பில் கூறியதை விட பாஜக கூட்டணி தேசிய அளவில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தமிழகத்திலும் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll GK Vasan BJP Congress tamilnadu 2024

அதேவேளையில், பாஜகவை விழ்த்தி ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன. இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்றே கூறுகின்றன. அதிலும் இந்தியா டுடே உள்ளிட்ட 3 செய்தி நிறுவனங்கள் பாஜகவிற்கு 400 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளன.

இதேபோல் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணியே இந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜக கூறி வந்த நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் அதற்கும் குறைவாக 350 இடங்களே என்று கணித்துள்ளன.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பில் கூறியதைவிட அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார். ஜிகே வாசான் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். நல்லரசாக உள்ள நாட்டை வல்லரசாக மோடி மாற்றுவார். ஒரு கட்சியின் வெற்றி தோல்விகளை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. கருத்துக்கணிப்பில் கூறியதை விட பாஜக கூட்டணி தேசிய அளவில் அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்திலும் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி செய்த தேர்தல் பணிக்கு தமிழக மக்கள் நல்ல அங்கீகாரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவதில் தவறு ஏதும் இல்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகள் உள்ளன. அவர்களுக்குள் ஒத்த கருத்துகள் இல்லை. நாட்டின் நலன் கருதி பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் நீடிக்கும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து வருகிறது. திமுக மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும். மீண்டும் காமராஜர் ஆட்சிக்கு பாஜக துணையாக இருக்கும். ஒவ்வொரு கட்சிகளுக்கும் வாக்கு சதவீதம் என்பது மாறும். முன்பு ஒரு காலத்தில் திமுகவுக்கு 2 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். பாஜகவிலும் குறைந்த எம்பிக்களே இருந்தனர். எனவே தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+