மாணவர்களிடம் சாதிய பாகுபாடு.. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டியதால் பணிமாற்றம் செய்யப்பட்ட போராசிரியர் கிருஷ்ணன் நீதிமன்றத்தை நாடியதோடு, புதிய கல்லூரியின் பணிக்கு செல்ல மறுத்ததால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிவகங்கையில் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி 75 ஆண்டு சிறப்பு மிக்க வரலாற்றை கொண்டுள்ளது. இந்த கல்லூரியில் தற்போது 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் தொல்லியல் துறை தலைவராக இருந்தவர் பேராசிரியர் கிருஷ்ணன். அதே துறையில் பேராசிரியராக இருப்பவர் சுப்ராமன். இந்நிலையில் தான் போராசிரியர் கிருஷ்ணன் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு காண்பிப்பதாக கூறப்படுகிறது.
அதாவது கிருஷ்ணன் தனது கல்லூரியில் பணி செய்யும் தனது சாதியை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்களுக்கு என் தனியாக வாட்ஸ்அப் குழு துவங்கி சாதி கட்டமைப்புகளை ஏற்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் கிருஷ்ணன் மற்றும் சுப்ராமன் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து சாதிய பாகுபாடு பிரச்சனையை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிருஷ்ணன் சாதிய பாகுபாடு காட்டியது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணன், சுப்மன் ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். கிருஷ்ணன் நீலகிரி மாவட்டம் அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தான் தனது பணி இடமாற்றத்துக்கு தடைக்கோரி கிருஷ்ணன் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பணி இடமாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனாலும் கிருஷ்ணனை கல்லூரி நிர்வாகம் ஏற்கவில்லை. இதையடுத்து கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அப்போது சாதி பாகுபாடு, சாதிய கட்டமைப்புகளை உருவாக்க கூடாது என கிருஷ்ணனுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு, நீலகிரி மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் சேர வலியுறுத்தியது.
இதனை கிருஷ்ணன் ஏற்க மறுத்தார். அதோடு கிருஷ்ணன் பணி மாறுதல் உத்தரவில் சாதி என்ற வார்த்தையை நீக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கூறினார். அதனை ஏற்ற நீதிமன்றம் சாதி என்ற வார்த்தையை நீக்கிவிட்டு சமூகம் என்ற வார்த்தைய சேர்க்கநீதிமன்றம் கூறியது. மேலும் 200 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கல்லூரிக்கு கிருஷ்ணனை பணி மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஆனால் கிருஷ்ணன் அதனை ஏற்க மறுத்ததோடு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பணி வழங்க வேண்டும் என கூறினார். இந்நிலையில் தான் தற்போது கிருஷ்ணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதாவது கல்லூரி கல்வி இயக்குனர் சார்பில் 17 பி என்ற பிரிவின் கீழ் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications