காரைக்குடி மத்திய அரசு நிகழ்ச்சியில் மறக்க முடியாத சம்பவம் செய்த கார்த்தி சிதம்பரம்.. பொங்கிய பாஜக
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய அரசின் நிகழ்ச்சியில் மத்திய அரசை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதால் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி ரயில் நிலையத்தில் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டம் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த கூட்டத்தில் சிவகங்கை எம்பி என்ற முறையில் கார்த்தி சிதம்பரம் அழைக்கப்பட்டிருந்தார். இந்த விழாவில் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில், காரைக்குடி ரயில் நிலையம் மதுரை ரயில் கோட்டத்தில் இருக்கிறது.

அதனை திருச்சி கோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரினோம். ஆனால் அதையும் கேட்காமல் ரயில்வே போர்டுக்கு கேட்க வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து போகும் ரயிலில் சாப்பாத்தி போடுகிறார்கள்.. என்று ரயில்வே பற்றி பல்வேறு புகார்களை பேசினார்.
இதனால் கோபம் அடைந்த பாஜகவினர், இங்கு அரசியல் பேசுவதற்கு இடமில்லை என்று கூறி எழுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.. இதனால் காங்கிரஸ் கட்சியினரும் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதவராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.. இதை பார்த்த மேடையில் இருந்த தலைவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது பாஜகவினர் பாரத் மாதக்கி ஜே என்று குரல் எழுப்பினார்கள்.. இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "உண்மையை சுடுகிறது. நான் உண்மையான புள்ளி விவரத்தை எடுத்து சொன்னதால் அவர்கள் மனதை உலுக்கி உள்ளது.. அதனால் கோபப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் வரி செலுத்தினோம் என்றால், 29 பைசா தான் திரும்ப வருகிறது.. ஆனால் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி கட்டினால் ரூ.2.73 காசு வருகிறது..
#உண்மைசூடுகிறது தலைவர் திரு கார்த்தி ப சிதம்பரம் MP அவர்கள் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது @KartiPC @INCTamilNadu @INCIndia pic.twitter.com/R8gkkBIfNY
— MP Karthi (@mp_karthi1) February 26, 2024
அந்த புள்ளி விவரத்தை நான் எடுத்து சொன்னது பாஜகவிற்கு பிடிக்கவில்லை.. தமிழ்நாட்டிற்கு இந்த ரயில்வே துறையின் மூலமாக எங்கள் தொகுதிக்கு நிதியை ஒதுக்கி உள்ளார்கள்.. இது அவர்கள் பெரிய மனசு பண்ணி கொடுக்குற நிதி கிடையாது. இங்கே நாம் வரி கட்டும் பணம் தான் நமக்கு வருகிறது.. அதை எடுத்து சொன்னேன்..
இரண்டாவது ரயில்வே துறை பற்றிய கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு ரயில்வே பொதுமேலாளரிடம் சென்றாலும், பவர் எங்களிடம் இல்லை.. எல்லாம் டெல்லியில் உள்ள ரயில்வே போர்டிடம் இருக்கிறது என்கிறார். இங்கு இருக்கிற தெற்கு ரயில்வே மேலாளருக்கு எந்த பவரும் இல்லை.. ரயில்வே தேர்வுகளை பெரிய அளவில் பிரபலம் செய்யாத காரணத்தால், வட இந்தியர்கள் அதிக அளவில் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்..
டிக்கெட் கவுண்டரில் கூட இந்தி பேசுகிறவர்கள் தான் இருக்கிறார்கள்.. இந்தி தெரியாதவர்கள் டிக்கெட் கவுண்டருக்கு போனால் அது சிரமம் ஆகிறது.. இங்கிருந்து போகின்ற ரயிலில் நம்ம ஊர் உணவு இல்லாமல் வெறும் சப்பாத்தி போன்ற உணவு தான் வழங்கப்படுகிறது.. கேட்டால் மத்திய அளவில் ஒப்பந்தம் கொடுத்துவிட்டோம்,. அங்கிருந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.. அதனால் சின்ன சின்ன பிரச்சனைகளை கூட ரயில்வே சரிசெய்யவில்லை என்பதை எடுத்து சொன்னேன்..
இங்கு கம்பன் எக்ஸ்பிரஸ் வருவது இல்லை.. அதை பலமுறை நான் சொல்லிவிட்டேன்.. அவர்கள் ரயில்வே போர்டிடம் கேட்க சொல்கிறார்கள்.. செட்டிநாடு ரயில்வே ஸ்டேசன் ஒரு பழமையான ரயில் நிலையம்... மேம்படுத்த வேண்டும் என்று சொன்னேன்.. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.. சிவகங்கையில் பல ரயில் நிற்பது இல்லை.. ரயிலில் சின்ன பயணிகள் ரயில் நிற்க வேண்டும் என்றாலும் ரயில்வே போர்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்கள்.. இப்படி நான் உண்மையை எடுத்த சொன்னதால் பாஜகவினருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது" இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications