இழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா!!

தங்க கட்டி மோசடியில் ஈடுபட்டதம்பதி கைது செய்யப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: இதோ இந்த போட்டோவில் இழுத்து போர்த்திக் கொண்டு நிற்கும் இந்த பெண்ணின் பெயர் கயல்விழி.. இவர் செய்த காரியத்தை பார்த்து சிவகங்கை, கோவை, மதுரை மாவட்ட போலீசாரே மிரண்டு பேர்யவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம்.. 27 வயதாகிறது.. இவர் மனைவிதான் கயல்விழி. பேங்கில் வேலை பார்ப்பதாக சொல்லி மாணிக்கம் மோசடி வேலையில் இறங்கினால், கயல்விழியும் கணவர் எவ்வழியோ, அவ்வழியிலேயே இறங்கினார்.

Couple arrested Coimbatore due to Cheating case

இந்த தம்பதியின் வேலை, வசதியான பெண்களை வலை வீசி தேடுவார்கள்.. அவர்களிடம் 24 கேரட் தங்க கட்டிகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக சொல்வார்கள்.

சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலையில் அந்த தங்க கட்டிகளை வாங்கி வந்ததாக சொன்னார்கள்.. பாதி விலைக்கு தங்கம் என்றதுமே, அந்த பெண்கள் ஆவலாக வாங்கி உள்ளனர்... இப்படியே 30க்கும் மேற்பட்டோரிடம் அந்த தங்கத்தை தந்தனர்.. அதன் பலனாக தம்பதி இருவரும் 30 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்துவிட்டனர்.

பணம் இல்லாதவர்கள், நகைகளாகவும் தரலாம் என்று இவர்களே ஒரு ஆஃபர் தந்தனர்.. அதன்படி அடகுக்கடையில் வேலை பார்க்கும் அகில் என்பவரிடத்தில் அந்த நகையை கொண்டு போய் தர சொல்லி உள்ளனர்.. அப்பாவி பெண்களும், அகிலிடம் கிட்டத்தட்ட 500 பவுனுக்கு மேல் தந்துள்ளனர்.. அதற்கு உத்தரவாதமாக பத்திரமும் எழுதி தந்துள்ளனர்.

பிறகு ஒருநாள், மாணக்கம், கயல்விழி, அகில் 3 பேருமே தங்கம், பணத்துடன் மதுரைக்கு தப்பிவிட்டனர்.. இந்த சம்பவம் 2016-ல் நடந்தது.. பிறகு மதுரையிலும் இதுபோலவே மோசடி செய்து பலரை ஏமாற்றினர்.. அங்கிருந்தும் தப்பிவிடவும், இறுதியில் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக புகார் தர ஆரம்பித்தனர்.

இதையடுத்து, காரைக்குடி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, கயல்விழி தம்பதியினரை தேடினர்.. சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி கோவை ஒண்டிப்புதூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதன்பேரில் கோவை சென்ற காரைக்குடி போலீசார் பதுங்கியிருந்த ஜோடியை கைது செய்தது.. ஆனால் அகிலை காணோமாம்.. அவர் எங்கே என்று தெரியவில்லை.. அவரை போலீசாரும் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+