சம்பந்தி திட்டிட்டாரு.. மனம் நொந்த தம்பதி.. 3 பக்க லெட்டர்.. வாழைப்பழத்தில் குருணை கலந்து.. தற்கொலை

சம்பந்தி திட்டிவிட்டதால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சம்மந்தி ரொம்ப மோசமா திட்டிட்டாரு.. இதனால் மனம் நொந்த தம்பதி, 3 பக்கத்திற்கு லட்டர் எழுதி வைத்துவிட்டு, வாழைப்பழத்தில் குருணை மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை தந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர்கள், ராசு-தமிழரசி தம்பதி... 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் முகேஷ்வர்மன்.. இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். புதுமண தம்பதிக்கு தனியாக வீடு எடுத்து வாடகைக்கும் குடி வைத்தனர்.

couple committed suicide near sivagangai

இந்நிலையில், முகேஷ்வர்மனுக்கும் அர்ச்சனாவுக்கும் சரியான புரிதல் இல்லாததால், சண்டை வந்துள்ளது.. சின்ன சண்டைதான்.. அதற்கே கோபித்து கொண்டு மேலூரில் உள்ள உள்ள தன் அம்மா வீட்டுக்கு போய்விட்டாராம்.. தன் பெற்றோரிடம் நடந்த சண்டையை பற்றி அர்ச்சனா சொல்லி உள்ளதாக தெரிகிறது.. அதனால் அர்ச்சனாவின் பெற்றோர், சம்பந்தியை போனில் கூப்பிட்டு மருமகனை பற்றி கடுமையாக திட்டியுள்ளனர்.

இதனால் தம்பதி இருவருமே அதிர்ச்சி ஆனார்கள்.. சம்பந்தி திட்டிவிட்டதால் மனம் உடைந்து போயினர்.. மகனுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைக்கவில்லையோ என்ற வேததனையிலும் இருந்துள்ளனர்... மகனிடம் சம்மந்திகள் தங்களை திட்டி விட்டதாகவும் புலம்பி உள்ளனர். கண்ணீர்விட்ட பெற்றோருக்கு மகன் ஆறுதல் சொன்னார்.

ஆனாலும் மன உளைச்சலில் இருந்த தம்பதி இருவரும் 3 பக்கத்திற்கு லட்டர் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.. வாழைப்பழத்தில் குருணை மருந்து கலந்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, இருவரின் சடலத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணையும் நடத்தி வருகின்றனர். சம்பந்தி திட்டிவிட்டதால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+