Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு புதுக்கோட்டைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரசார வாகனத்தில் இன்று புறப்பட்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் டூவீலரில் சென்று கொண்டிருந்த இளைஞர் பரிதாபமாக இறந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Edappadi Palaniswami

திறந்த வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் நடந்த திமுகவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி அதிமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எடுத்து கூறி பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த எடப்பாடி பழனிச்சாமி, அதன்பிறகு அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்றார். இந்த வேளையில் மதகுபட்டி அருகே எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில் 28 வயது இளைஞர் பலியானார். விசாரணையில் மதகுபட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

Edappadi Palaniswami

மேலும் ஆறுமுகம் தனது டூவீலரில் கோவில் திருவிழா பார்க்க சென்றபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது.

இறந்த ஆறுமுகத்தின் உடல் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து நடந்தாலும் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை சுற்றுப்பயணம் தொடர்ந்தது. சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி விராலிமலை தொகுதிக்கான அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+