சரக்கடிக்க வந்த சாரைப்பாம்பு..? சிவகங்கையில் சிறப்பான சம்பவம்...!
சிவகங்கை: சிவகங்கை அருகே டாஸ்மாக் மதுக்கடைக்குள் புகுந்த பாம்பைக் கண்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்தனர்.
Recommended Video
சிவகங்கை - காரைக்குடி 100 அடி சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த மதுக்கடை இருப்பதால் அங்கு எப்போதும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதிக் காணப்படும். மேலும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கம்.
மேலும் மதுக்கடைக்கு அருகிலேயே மதுக் கூடம் இருப்பதால், கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு ஆற அமர அங்கு மதுக்குடிப்பது வழக்கம். இதனால் அங்கும் எப்போது கூட்டமாகவே காணப்படும். மதுக்கடையில் கண்காணிப்பாளர் விற்பனையாளர் என மூவர் வேலை செய்கின்றனர்.

மதுக்கடைக்குள் புகுந்த பாம்பு
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறை தினம் என்பதால் அந்த மதுக்கடையில் வழக்கத்தைவிட மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. டாஸ்மாக் மதுக் கடை ஊழியர்கள் மும்முரமாக விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று திடீரென மதுக்கடைக்குள் புகுந்தது.

தலைதெறிக்க ஓடிய ஊழியர்கள்
அழையா விருந்தாளியாக கடைக்குள் புகுந்த பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தலைதெறிக்கக் கடையை விட்டு வெளியே ஓடினர். மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தில் இருந்த மதுப்பிரியர்களும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். இதனால் அந்த இடமே திடீரென பரபரப்பாக மாறியது.

பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்
இதனையடுத்து மதுக்கடைக்குள் புகுந்த பாம்பு குறித்து சிவகங்கை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் அரை மணி நேர தேடுதலுக்குப் பிறகு மதுபான பெட்டிகளுக்கு இடையே மறைந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

நிம்மதியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள்
சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டதை அடுத்து அதனை வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்காக தீயணைப்புத்துறையினர் கொண்டு சென்றனர். பாம்பு பிடிபட்டதையடுத்து நிம்மதியடைந்த மதுக் கடை ஊழியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் மீண்டும் தங்கள் பணியைத் தொடங்கினர். மதுக்கடைக்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது..
-
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications