ஒரு பக்கம் ஜோசப் விஜய்.. இன்னொரு பக்கம் ஸ்டாலின்.. அட நம்ம எச்.ராஜா டீ குடிக்க போனது ஒரு தப்பா?
தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் எச்.ராஜா டீ குடித்த புகைப்படம் ஒன்று முக்கிய காரணத்திற்காக பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது.
Recommended Video

சிவகங்கை: தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் எச்.ராஜா டீ குடித்த புகைப்படம் ஒன்று முக்கிய காரணத்திற்காக பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது.
பாஜக வேட்பாளர் தேசிய செயலாளர் எச்.ராஜா தற்போது சிவகங்கையில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். லோக்சபா தேர்தலில் சிவகங்கையில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக வேட்பாளர் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் - திமுகவிற்கு எதிராக இவர் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் எச்.ராஜா புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க டிரெண்ட் அடித்துள்ளது.

டீ குடிக்கும் பழக்கம்
தேர்தல் பிரச்சாரங்களில் தற்போது வேட்பாளர்கள் டீ குடிப்பது வழக்கமாகி இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக என்று எல்லா கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சாலை ஓரத்தில் இருக்கும் டீ கடைகளில் டீ குடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. பெரிய தலைவர்கள் கூட இப்படி சாலை ஓரம் டீ குடித்து வருகிறார்கள்.

எச்.ராஜா
ஆனால் இதெல்லாம் பெரிய அளவில் சிக்கலுக்கு உள்ளாக்கவில்லை. பெரிய அளவில் வைரலாகவில்லை. மாறாக பாஜக வேட்பாளர் எச்.ராஜா டீ குடித்த புகைப்படம் மட்டும் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு முக்கிய விஷயங்களுக்காக இது வைரலாகி உள்ளது.

இப்படியா
எச்.ராஜா சிவகங்கையில் டீ குடிக்கும் புகைப்படத்தில், பின் பக்கம் நடிகர் விஜய் புகைப்படம் இருக்கிறது. அதோடு திமுக தலைவர் ஸ்டாலினின் புகைப்படமும் இருக்கிறது. அந்த கடையை நடத்தும் நபரே திமுகவை சேர்ந்த விஜய் ரசிகர் என்றும் கூறப்படுகிறது.

வரலாறு
நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று கூறி பிரச்சனை செய்தவர்தான் எச்.ராஜா. கடைசியில் அவரின் ரசிகரின் கடையிலேயே டீ குடிக்கிறாரே எச்.ராஜா என்று விஜய் ரசிகர்கள் இன்று முழுக்க கிண்டல் செய்து வருகிறார்கள். திமுகவினரும் எச். ராஜாவை காலையில் இருந்து இதை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications