அன்று கருணாநிதி வழங்கிய இலவச தொலைக்காட்சியில்... இன்று ஜோராய் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சி..!
சிவகங்கை: கொரோனா பரவல் காரணமாக கல்வித் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படும் நிலையில் அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று யூடியூப், ஆன்லைன் , ஸ்கைப் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் கூட இன்னும் கருணாநிதி கொடுத்த இவலச வண்ண தொலைக்காட்சி மூலம் கல்வி கற்கும் மாணவர்களும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவர், தனது வீட்டில் உள்ள இலவச வண்ண தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருவதை குறிப்பிடலாம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் யூடியூப், ஸ்கைப் மூலம் தினமும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை பாடம் எடுத்து வருகிறார்கள். ஆனால் இத்தகைய வசதியும், கல்வி கற்கும் வாய்ப்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிட்டியதா என்றால் முழுமையாக இன்னும் கிட்டவில்லை என்றே கூறலாம்.

கல்வித் தொலைக்காட்சி
இந்நிலையில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது பள்ளிக்கல்வித்துறை. அவ்வாறு கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களை பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தான் பயில்கின்றனர். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், கருணாநிதி 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இன்றும் பல ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் கல்வி கற்பதற்கு உதவி புரிகிறது என்பது தான்.

தேவக்கோட்டை
இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம், கல்வி தொலைக்காட்சியை பார்த்து பாடம் கற்கும் மாணவர்களிடம் தங்கள் ஆசிரியர்கள் காலையும், மாலையும் அலைபேசி மூலம் அழைத்து பாடத்தின் புரிதல் பற்றி பேசுவதாகவும் கூடுதல் விளக்கம் அளிப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி
மேலும், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்படும் நேரங்களில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வீட்டில் அமர்த்தி அதனை கவனிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். இதனிடையே கல்வித் தொலைக்காட்சி மூடப்படாது என்றும் இன்னும் புதுப்பொலிவுடன் இயக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications