இறுதிச்சடங்கு.. இந்து மத முறைப்படியா? இஸ்லாத்திலா? மனைவிகள் சண்டை! வித்தியாசமான தீர்ப்பளித்த ஐகோர்ட்
சிவகங்கை: இஸ்லாம் மதத்தை தழுவி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட தனது கணவரின் உடலை இந்து மத நம்பிக்கையின்படி இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறி முதல் மனைவி தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வித்தியாசமான தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (55). இவர் 1988 ஆம் ஆண்டு சாந்தி எனும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாலசுப்பிரமணியன் சில ஆண்டுகள் தனியே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாலசுப்பிரமணியன் கடந்த 2019ம் ஆண்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் விவாகரத்தும் கிடைத்தது. ஆனால், அதனை எதிர்த்து மனைவி சாந்தி மேல்முறையீடு செய்ததால், விவகாரத்து ரத்தானது. இப்படி இருக்கையில் சையத் அலி பாத்திமா எனும் பெண்ணுடன் பாலசுப்பிரமணியன் வாழ்ந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு கட்டத்தில் திருமணம் ஆகியுள்ளது. அப்போதுதான் பாலசுப்பிரமணியன், அன்வர் உசேனாக மாறியுள்ளார்.
இந்நிலையில் எனது கணவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் அன்வர் உசேன் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை இஸ்லாம் மத சடங்குகளின்படி புதைக்க இரண்டாவது மனைவி பாத்திமா முயன்றிருக்கிறார். இதனை எதிர்த்துதான் காவல் நிலையத்தில் புகார் அளித்த முதல் மனைவி சாந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான்தான் சட்டப்படி அவருக்கு வாரிசு. எனவே எங்களது மத சடங்குச் படி உடல் அடக்கம் செய்வதற்கு எனது கணவரின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார். தற்போது உசேனின் உடல் காரைக்குடி அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "அரசு மருத்துவமனையில் உள்ள ஓட்டுநரின் உடலை முதலில் முதல் மனைவியிடம் சாந்தியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் தங்களது மதப்படி சடங்குகளை செய்து அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு காரைக்குடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது மனைவி இறுதி மரியாதை செய்து இஸ்லாமிய சடங்குகள் படி அடக்கம் செய்யலாம்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.
உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு மத நம்பிக்கைகளின்படி இறுதிச் சடங்கு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications