எனக்கு கருணாநிதியை இதனால் பிடிக்கும்.. நான் அவரை பாராட்டுகிறேன்.. எச்.ராஜா சொல்லும் காரணம்!

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை தனக்கு பிடிக்குமென்று சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா குறிப்பிட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை தனக்கு பிடிக்குமென்று சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா குறிப்பிட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில் சிவகங்கையில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக வேட்பாளர் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். இதற்காக இவர் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

எச்.ராஜா தற்போது சிவகங்கையில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவிற்கு எதிராக இவர் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

எச்.ராஜா பேட்டி

எச்.ராஜா பேட்டி

சிவகங்கையில் பேட்டி அளித்த எச்.ராஜா, சிவகங்கையில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் பல உண்மைகளை மறைத்துவிட்டார். அவர் வேட்புமனுவில் சில விஷயங்களை குறிப்பிடவில்லை. முக்கியமாக தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள், வழக்குகள் குறித்து குறிப்பிடவில்லை.

குடும்பம் எப்படி

குடும்பம் எப்படி

அவர் குடும்பம் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது. அதேபோல் நிறைய சொத்துக்கள் இருப்பது குறித்த உண்மைகளையும் கார்த்தி சிதம்பரம் மறைத்துவிட்டார். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் குறிப்பிட்டேன். ஆனால் அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

ஸ்டாலின் என்ன

ஸ்டாலின் என்ன

ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்பதை தவறி வேறு எந்த தகுதியும் இல்லை. மாறி மாறி பேசுவதை, தவறாக பேசுவதை வழக்கமாக கொண்டவர்தான் ஸ்டாலின். அதனால்தான் நான் கருணாநிதியை பாராட்டுகிறேன்.

கருணாநிதி இல்லை

கருணாநிதி இல்லை

ஏனென்றால் கருணாநிதிக்கு ஸ்டாலின் குறித்து தெரியும். ஸ்டாலினுக்கு போதிய திறமை கிடையாது என்றுதான் அவரை தலைவராக கூட ஆக்காமல் வைத்து இருந்தார். ஸ்டாலினை கடைசிவரை கருணாநிதி முதல்வராக்கவில்லை. அதனால் எனக்கு கருணாநிதியை பிடிக்கும் என்று எச். ராஜா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+