பாஜக தேசிய தலைவருக்கே இப்படியா? எச்.ராஜா மொழிபெயர்க்க.. காரைக்குடியில் காத்து வாங்கிய “காலி” சேர்கள்
சிவகங்கை: காரைக்குடியில் நடைபெற்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஏராளமான சேர்கள் காலியாக கிடந்த கேமராக்களின் கண்களில் பதிவாகி இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தார்.
அன்றில் இருந்தே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது. மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்கள் அடிக்கடி தென்னிந்தியா வருகை தருகின்றனர்.

தென் இந்திய பயணங்கள்
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாடுக்கு வந்து சென்று இருக்கிறார். இதேபோல் கேரளா, தெலுங்கானாவுக்கு அமித்ஷா அண்மையில் சென்றார்.

காரைக்குடி வந்த ஜே.பி.நட்டா
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வந்தார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், மாலை காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

வேட்டி சட்டை
இந்த நிகழ்வில் தமிழர் பாரம்பரியப்படி வேட்டி, சட்டை, துண்டு போட்டு அவர் இதில் கலந்துகொண்டார். விழாவில் பாரத் மாதா கி ஜே, வெற்றி வேல், வீரவேல் என முழக்கமிட்டு அவர் தனது உரையை தொடங்கினார். "இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கையிலும், இங்கு எழுப்பப்படும் கரகோசத்தை காணும்போதும் ஒரு தெளிவான உண்மை எனக்கு தெரிகிறது.

தாமரை மலரும்
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தாமரை மலரப்போகிறது. தமிழ்நாடு புனித பூமி. போர் வீரர்களின் பூமி இது. தமிழ் கலாச்சாரம் மிகவும் பழமையானது. இந்தியாவுக்கு அது பெருமை தேடித் தருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் தமிழ் கவிதையை வாசித்தார். தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்களிப்பை மறக்க முடியாது.

காலி சேர்கள்
இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட ஜே.பி.நட்டா, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஜே.பி.நட்டாவின் இந்த பேச்சை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். இருவரும் மேடையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க பார்வையாளர்கள் அரங்கில் காலி சேர்கள் காத்து வாங்கி கொண்டிருந்தன. மூத்த நிர்வாகிகள் அமரும் இருக்கைகளுக்கு பின் மக்கள் அமரும் இடத்தில் காலி நாற்காலிகள் கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
-
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications