அங்கே இடிமுழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது! திமுக கூட்டத்தில் பக்திப்பாடல்! சாமி ஆடிய பெண்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பெண்கள் சாமி ஆடிய நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை திமுகவில் உள்ள ஒவ்வொரு சார்பு அணிகளும் மாவட்ட வாரியாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் சிவகங்கை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் காரைக்குடியில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்துக்கு காரைக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருந்த மகளிரணி நிர்வாகிகள் அமைச்சர் மேடையேறி பேசும் வரை, கூட்டம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக ஆர்கெஸ்ட்ரா கச்சேரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சினிமா பாடல், திமுக பாடல் என பாடிய ஆர்கெஸ்ட்ரா குழு திடீரென பக்திப்பாடல் ஒன்றை பாடியது. ''அங்கே இடிமுழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது'' என பாடல் பாடத் தொடங்கியதும் மேடைக்கு கீழே அமர்ந்திருந்த பெண்கள் பலரும் பக்திப் பரவசத்தில் சாமி ஆடத் தொடங்கினர். அமைச்சர் வரும் நேரத்தில் இதென்னடா வம்பாக போச்சு என திமுக நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதையடுத்து பாடலை நிறுத்துங்கப்பா என திமுக நிர்வாகி ஒருவர் சவுண்டு விட்டதை தொடர்ந்து ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாடுவதை நிறுத்தினர். சாமி ஆடிய பெண்களை அவர்கள் அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அமர வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். கடைசியில் இந்த தகவல் அமைச்சர் பெரியகருப்பன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த நிகழ்வை பொறுத்தவரை பகுத்தறிவு கட்சியாக பார்கப்படும் திமுக பொதுக்கூட்டத்தில் பக்திப்பாடல் பாடப்பட்டது தான் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications