கோயில் உண்டியலில் ஐபோன்.. நானாக இருந்தால் வித்தியாசமாக கையாண்டு இருப்பேன்! - கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை: கோயில் உண்டியலில் பக்தர் தனது ஐபோனை தவறவிட்டது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நான் இருந்தால், இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாண்டு இருப்பேன் என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கந்தசுவாமி திருக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் தரிசனத்திற்கு என நாள்தோறும் குறிப்பிட்ட அளவில் பக்தர்கள் வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் இக்கோயிலுக்கு சென்றிருந்த சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சாமி கும்பிட்டுவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியிருக்கிறார். அப்போது தவறுதலாக மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் நழுவி உண்டியலில் விழுந்திருக்கிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோயில் நிர்வாகத்திடம் போன் குறித்து கேட்டிருக்கிறார். ஆனால் கோயில் நிர்வாகம் போனை வழங்க மறுத்துவிட்டது. மட்டுமல்லாது, உண்டியலில் விழுந்தது அனைத்தும் சுவாமிக்கே சொந்தம் என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து தினேஷ் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகி, நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கி, செல்போனை கேட்டு கடிதம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. அமைச்சர் சேகர்பாபுவும் இதே கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள கார்த்தி சிதம்பரம், "இந்த விவகாரத்தை நானாக இருந்தால் வித்தியாசமாக கையாண்டு இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
அதாவது, "உண்டியலில் ஐபோன் விழுந்த செய்தியை நான் முழுமையாக படித்திருந்தேன். இந்த விவகாரத்தில் உண்டியலில் விழுந்தது அனைத்தும் கோயிலுக்கு சொந்தம் என்று அறநிலையத்துறை கூறுகிறது. இதுவும் சரிதான். இன்று செல்போன் விழுந்துவிட்டது என்று கூறுபவர்கள், நாளை கை தவறி மோதிரம் விழுந்துவிட்டது, தங்க காசு விழுந்துவிட்டது என்று கூறுவார்கள்.
மொபைல் ஃபோன் என்றால் யாருடையது என கண்டுபிடித்து விடலாம். ஆனால் மோதிரம், செயின் போன்றவை விழுந்து விட்டால் யாருடையது என்பதை கண்டுபிடிப்பது கடினமானது. இந்த முறை செல்போனுக்கு விதிவிலக்கு கொடுத்தால் அடுத்த முறை மோதிரம் செய்து இருக்கும் விதிவிலக்கு கேட்பார்கள்.
செல்போன் விழுந்த விஷயத்தில் செல்போனுக்கு உண்டான தொகையை கொடுத்துவிட்டு அதனை திரும்ப கொடுத்து இருக்கலாம். இப்படி விதிவிலக்கு செய்திருக்கலாம். மொபைல் போன் என்பது வெறும் பொருள் மட்டுமல்ல அதில் பல தரவுகள் இருக்கிறது. நானாக இருந்தால் இந்த விஷயத்தை சற்று வித்தியாசமாக கையாண்டு இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications