Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரமா? காங்கிரசிலேயே புகையுதே! வெல்வாரா சிதம்பரத்தின் வாரிசு?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணியில் மீண்டும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மீண்டும் அங்கு காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி கார்த்தி சிதம்பரம் களமிறங்க உள்ளரா? இல்லையா? அந்த தொகுதியில் உள்ள உள்கட்சி புகைச்சலை கடந்து காங்கிரஸ் வெல்லுமா? என்பது பற்றிய தகவல் வருமாறு:

தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Lok Sabha Election 2024 What is the history of Sivaganga Parliament Constituency who will contest from Congress details here


திருவள்ளூர் (தனி), கடலூர், கரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சிவகங்கையில் திமுக போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதியை சேர்ந்தவர்கள் போராடி வந்த நிலையில் கட்சி தலைமை செவிசாய்க்கவில்லை. மீண்டும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சிவகங்கை தொகுதி நிலவரம் என்ன? அங்கு காங்கிரஸ் கட்சி யாரை வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது? என்பது பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சிவகங்கை லோக்சபா தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தின் மகனாவார். சிவகங்கை லோக்சபா தொகுதி என்பது 2 மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமரை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஆலங்கடி உள்ளிட்ட தொகுதிகள் சிவகங்கை லோக்சபா தொகுதிக்குள் வருகின்றன. இதில் இப்போது 4 தொகுதிகளில் திமுகவினரும், அதிமுக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும் எம்எல்ஏக்களாக உள்ளன.

இந்நிலையில் தான் சிவகங்கை லோக்சபா தொகுதியில் இதுவரை மொத்தம் 13 லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் அதிகமாக 10 முறை காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ப சிதம்பரம் மட்டுமே 7 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதிக்கு முதல் முறையாக கடந்த 1967 ல் லோக்சபா தேர்தல் நடந்தது. அதன்பிறகு 1971ல் 2வது தேர்தல் நடந்தது. இந்த 2 தேர்தல்களிலும் திமுகவின் கிருத்தினான் வெற்றி பெற்றார். 1977 ல் அதிமுகவின் பெரியசாமி தியாகராஜனும், 1980 ல் காங்கிரஸ் கட்சியின் ஆர்வி சுவாமி நாதனும் வெற்றி பெற்றனர்.

அதன்பிறகு தொடர்ந்து 5 முறை காங்கிரஸ் சார்பில் ப சிதம்பரம் வெற்றி பெற்றார். 1984, 1989, 1991, 19996, 1998 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப சிதம்பரம் போட்டியிட்டு வாகை சூடினார். அதன்பிறகு மீண்டும் 1999ல் காங்கிரறாின் சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 2004, 2009 தேர்தல்களில் ப சிதம்பரம் வென்றார். 2014 தேர்தலில் ப சிதம்பரம் போட்டியிட மறுத்த நிலையில் இந்த தொகுதி அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டார். ஆனால் கார்த்தி சிதரம்பர் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனிடம் தோற்றார். இதையடுத்த கடந்த 2019ல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரம் 5 லட்சத்த 66 ஆயிரத்து 104 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து 860 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் கார்த்தி சிதம்பரம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று எம்பியானார்.

இப்போது மீண்டும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கார்த்தி சிதம்பரம் ஆர்வமாக உள்ளார். அதேபோல் முன்னாள் எம்பி சுதர்சன் நாச்சியப்பனும் காய் நகர்த்தி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடத்துடனான நெருங்கிய தொடர்பால் ப சிதம்பரத்தின் மகனும், சிட்டிங் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியில் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க்கூடாது என முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட சுதர்சன நாச்சியப்பனும் ஆர்வமாக உள்ளார். மேலிடத்திடம் அவரும் வாய்ப்பு கேட்டு வருகிறார். ஆனால் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடியும். கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் சுதர்சன நாச்சியப்பன் தரப்பு அதிருப்தியடையலாம்.

அதேபோல் திமுக நிர்வாகிகளும் சிவகங்கையில் இந்த முறை திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கட்சி தலைமை அதற்கு செவிாய்க்கவில்லை. இதனால் சிவகங்கையில் காங்கிரஸ், திமுக தலைவர்கள் அதிருப்தி அடைய அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை மீண்டும் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் அவர் இந்த அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி அரவணைத்து சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும் னெ அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+