வீட்டின் கதவை திறந்த திருமலாதேவி.. கணவனின் நிலை கண்டு பேரதிர்ச்சி.. போலீஸ்காரரின் விபரீத முடிவு
சிவகங்கை: மானாமதுரையில் தன்னதானே கத்தியால் குத்தி கொண்டு ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்ட பிரபு (31). இவர் மதுரை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி திருமலா தேவி தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை மணிகண்ட பிரபுவின் மனைவி திருமலா தேவி பள்ளியில் பணி முடிந்ததும் வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவர் மணிகண்ட பிரபு உள்ளே கத்தியால் நெஞ்சில் குத்தி கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தாராம். அதை பார்த்துவிட்டு வெளியே அலறி அடித்து கொண்டு வெளியே ஒடி வந்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து வீட்டுக்குள் பார்த்துள்ளனர். அங்கு இரத்த வெள்ளத்தில் மணிகண்ட பிரபு உயிரிழந்தது கிடந்துள்ளார். பின்னர் அவர்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்ட பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், மணிகண்ட பிரபு, தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவரது மனைவி திருமலா தேவி போலீசாரிடம் தெரிவித்தார்.
மணிகண்டன் பிரவுவின் மனைவி திருமலா தேவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னதானே அவர் கத்தியால் குத்தி கொண்டது ஏன் என்பது குறித்தும், குடும்ப பிரச்னையா அல்லது அலுவலக பிரச்னை என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மானாமதுரையில் தன்னதானே கத்தியால் குத்தி கொண்டு ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications