கத்தை கத்தையா பணம்.. இனி சிங்கப்பாதை.. இருக்கு ‘சாட்டையடி’.. ‘சேதி’ வரும்.. சீறிய ஓபிஎஸ் ஆதரவாளர்!
இரட்டை இலை சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றும் திறமையோ, அறிவோ எடப்பாடிக்கு கிடையாது என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
சிவகங்கை : ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம் இதுவரை பூப்பாதையாக பயணித்தது.. இனி சிங்கப்பாதையை நோக்கி ஓபிஎஸ் பயணிப்பார் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சார்பில் சிவகங்கையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எங்களுக்கு பாதகமில்லை
அப்போது பேசிய மருது அழகுராஜ், "உச்ச நீதிமன்ற தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக அமைந்து விட்டதாக கொண்டாடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி அணிக்கு சாதகமாகவோ, ஓபிஎஸ் அணிக்கு பாதகமாகவோ அமையவில்லை. அதிமுக கட்சியின் சின்னம், உரிமை இன்றைக்கும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கையில் தான் இருக்கிறது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியவர்கள், அவரது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரது படத்தை சட்டைப் பையில் வைப்பதை எடப்பாடி தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அண்ணாமலைக்கு எச்சரிக்கை
அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பறிக்க நினைக்கும் எடப்பாடியின் முயற்சியை தொண்டர்கள் துணையுடன் முறியடிப்போம். அண்ணாமலை அதிமுகவினை அடக்கும் வகையில் செயல்பட்டாலோ, ஒருவருக்கு சார்பாக பேசினாலோ அது பாஜகவிற்கு எதிர்ப்பு அலையினை உருவாக்கும். நாங்கள் பாஜகவை மதிக்கிறோம், ஆனால், எங்களை பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடியால் இரட்டை இலை சின்னத்திற்கு அவமானம் தான் ஏற்படும். இரட்டை இலை சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றும் திறமையோ, அறிவோ எடப்பாடிக்கு கிடையாது.

கத்தை கத்தையாக
எடப்பாடி பழனிசாமி அபகரிப்பு அரசியல் நடத்தி வருகிறார். தன்னுடைய கத்தை கத்தையான பணத்தை வைத்துக்கொண்டு அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி அபகரிக்க நினைக்கிறார். கழகத்தில் மனசாட்சி உள்ள அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டத்தைத் தான் ஆதரிக்கின்றனர். என்னதான் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் தீர்ப்பு சொன்னாலும் பொதுமக்களும், கடைக்கோடி தொண்டனும் சொல்லும் தீர்ப்பு தான் இறுதியானது.

சிங்கப்பாதை
ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம் இதுவரை பூப்பாதையாக பயணித்தது. இனி சிங்கப்பாதையை நோக்கி ஓபிஎஸ் பயணிப்பார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கும் போது அவசர அவசரமாக தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பதன் பின்னணி புரியவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு செய்தியைச் சொல்லும். அது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சாட்டையடியாக அமையும்" என்று கடுமையாகப் பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications