“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட முன்னாள் சேர்மன் பொன்.மணி பாஸ்கரன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு, அதிமுக மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிமுகவை சீரழிக்கும் அவர் தொலைந்துபோக வேண்டும் என்றும் சாபமிட்டுள்ளார் பொன்.மணி பாஸ்கரன்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக இருந்தவர் பொன். மணி பாஸ்கரன். இவர் சிங்கம்புணரி எஸ்.புதூர் அருகே உள்ள பொன்னடப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையில் தொழிலதிபராக இருந்து வரும் இவர் கடந்த 2019ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சில் 1வது வார்டில் நின்று வெற்றி பெற்றார்.

பின்னர் மாவட்ட சேர்மன் பதவியையும் பெற்றார். அதிமுகவில் மாநில அம்மா பேரவை துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் சீட்டும் கேட்டிருந்தார். ஆனால், கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின்போது எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களின் முன்பாக சூடம் ஏற்றியபடி பேசிய பொன். மணி பாஸ்கரன், "ஐயா புரட்சித்தலைவரே... நீங்கள் உருவாக்கிய இயக்கம் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக உழைத்த மாசற்ற தலைவரே, ஏழைகளுடைய வாழ்வுக்காக உழைத்த உத்தமரே... நீங்கள் வங்கக் கடலிலே உறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.
கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள். என்னை போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆணிவேராய் தாங்கிப் பிடித்த இயக்கத்தை விட்டுவிட்டு நான் செல்கின்றேன். இன்னும் பல பேரை செல்ல வைத்துவிடாதீர்கள்.
முடிந்தால், பொதுச்செயலாளருக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்லச் சொல்லுங்கள். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை... இந்த மாவட்ட கழகச் செயலாளரிடமிருந்து, மாவட்ட அவைத் தலைவரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று அவருக்குச் சொல்லிக் கொடுங்கள். பாவம் நிர்வாகிகள், பாவம் தொண்டர்கள்.
புரட்சித்தலைவி அம்மா... நான் உங்கள் வீட்டிலே எத்தனை முறை சோறு சாப்பிட்டுருக்கேன். அந்த உணர்வுக்காகத்தான் இந்த வேட்டியைக் கட்டியிருந்தேன். எல்லோருக்குமே தெரியும். பூங்குன்றன் அண்ணனுக்கும் என்னைப் பற்றி நல்லாத் தெரியும். இன்று கூட அவரிடம் பேசினேன், கண்ணீர் வடித்தேன், இயக்கத்தை விட்டுப் போகிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அம்மா, போதும். நீங்கள் காட்டிய வழியிலே... அதிலிருந்து நான் விடுபட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை விடுபட்டுச் செல்கிறேன். இந்தத் துரோகிகளுக்கு, சிவகங்கை மாவட்டத்தைச் சீரழித்த நயவஞ்சகக்காரர்களுக்குத் தண்டனை கொடுங்கள். அவர்களுக்குத் தீர்ப்பு கொடுங்கள்.
அரசியலிலே அவர்கள் வாழாவெட்டியாகப் போக வேண்டும். இத்தோடு தொலைந்து போகவேண்டும். அவர்கள் முகவரியற்ற மனிதர்களாகச் சிவகங்கையிலே வாழ வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும். வழிகாட்ட வேண்டும்." என சாபமிட்டுள்ளார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications