மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் மிஸ் ஆன ராஜ கண்ணப்பன்!
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த திமுக கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜ கண்ணப்பன் கலந்து கொள்ளவில்லை.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரண்மனை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால், அண்மையில் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மட்டும் மிஸ்ஸிங்.
ராஜகண்ணப்பனை பொறுத்தவரை சென்னையில் வசித்து வந்தாலும், சிவகங்கை மாவட்டத்தில் தான் அரசியல் செய்து வருகிறார். பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் கூட தலைவர்களுக்கு இணையாக ராஜகண்ணப்பனின் படம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது பற்றி விசாரித்ததில், சிதம்பரத்தை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்து வரும் நிலையில் கார்த்தி சிதம்பரத்துடன் ஒரே மேடையில் அமர்வதை ராஜகண்ணப்பன் விரும்பவில்லையாம்.
மேலும் ஆதரவு திமுக கூட்டணிக்கு தான், அதில் மாற்றமில்லை என்கிறார் ராஜகண்ணப்பனுக்கு நெருக்கமான யாதவ சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர்.
பரவாயில்லையே, கொள்கையில் ரொம்ப் பிடிப்பா இருக்கிறாரே கண்ணப்பன்!












Click it and Unblock the Notifications