நட்சத்திர தொகுதியாக மாறிய காரைக்குடி.. சீமானுக்கு எதிராக களம் காணும் 24 பேர்.. யார் யாருனு பாருங்க!
சிவகங்கை: காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி உட்பட மொத்தமாக 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் பாண்டி என்ற பெயரில் இருவரும், பிரவு என்ற பெயரில் இருவரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் காரைக்குடி தொகுதிக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறை உடல்நலக் குறைவு காரணமாக எச்.ராஜா தேர்தலில் போட்டியிடாததால், அதிமுக கூட்டணியில் இருக்கும் அமமுகவுக்கு இந்த தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை சட்டமன்றம் சென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சீமான், சொந்த மாவட்டமான சிவகங்கையில் களமிறங்கி இருக்கிறார். அதேபோல் உள்ளூர் செல்வாக்குடன் இருக்கும் தேர்போகி பாண்டிக்கு அமமுகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சிட்டிங் எம்எல்ஏ-வான மாங்குடி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் சோசியல் மீடியாவில் தவெக பிரபலமாக இருக்கும் பிரபு களத்தில் இருக்கிறார். இந்த 4 வேட்பாளர்களை கடந்து மொத்தமாக 39 பேர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதில் 8 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அதேபோல் 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இறுதியாக 25 பேரின் பெயர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன்படி பிரபு என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும், பாண்டி என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியில் இருக்கின்றனர்.
நட்சத்திர வேட்பாளர்களாக சீமான், தேர்போகி பாண்டி, மாங்குடி மற்றும் பிரபு ஆகிய 4 பேர் நேருக்கு நேர் மோதுவதால், காரைக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. அதேபோல் காரைக்குடி தொகுதியில் யார் வெல்வார்கள் என்பதே கணிக்க முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் சாதிய கணக்குகள் கடந்து, நட்சத்திரங்களும் களத்தில் இருக்கின்றனர். இதனால் மே 4ம் தேதி காரைக்குடி தொகுதி அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதியாக மாறும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications