Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மீது வெறுப்பானவர்கள் வீசிய குண்டு.. ராஜ்பவன் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம் கூறிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் விவாதமாக வெடித்திருக்கும் நிலையில், ஆளுநரின் அவதூறு குண்டுகளால் வெறுப்பாகிப்போனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

விடுதலைப்போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 222வது குரு பூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

 Seeman barrages accusations against the governor in the petrol bomb attack

சென்னை கிண்டி சர்தார்படேல் சாலையில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. அதாவது ஆளுநர் மாளிகை முதலாவது நுழைவு வாயில் எதிரே மர்மநபர் ஒருவர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அவரை விசாரிப்பதற்காக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்த இரண்டு பாட்டில்களை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசியிருக்கிறார் அந்த மர்ம நபர். இந்த பாட்டில்கள், மாளிகையின் அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு பக்கத்தில் விழுந்து லேசாக தீப்பற்றி எரிந்தது. போலீசார் உடனே தீயை அணைத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஒப்படைத்தனர். கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் மேலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னை சிறையிலிருந்து விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால்தான் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இவர் ஏற்கெனவே கடந்த 2022ம் ஆண்டு பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போதும் குண்டு வீச்சில் ஈடுபட்டிருப்பது தொடர்பாக வெடிபொருள் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். மறுபுறம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாகதான் சீமானும் தனது கருத்து கூறியுள்ளார்.

அவர் பேட்டியில் கூறியதாவது, "ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவருக்கும், திமுகவினருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. யாரோ ஒருவர் எறிந்திருக்கலாம். ஆளுநர் அவரது வேலையை மட்டும் செய்ய வேண்டும். இதற்கு முன்பாக இருந்த ஆளுநர்கள் வீடுகளில் குண்டுகள் வீசப்பட்டதா? தேவையில்லாத வரலாற்றுத் திரிபு செய்திகளை ஆளுநர் சொல்லி வருகிறார். இங்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனும் அறிவுத் தெளிவும், அரசியல் புரிதலும் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய இன வரலாற்றை வாசித்து, நேசித்து வருபவர்கள். வாய்க்கு வந்தபடி ஆளுநர் பேசக்கூடாது. ஆளுநரின் தொடர் பேச்சுக்களால், ஏற்பட்ட வெறுப்பில் அந்த நபர் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+