என்னங்க இது?.. திமுக, பாஜகவுக்கே டஃப் தரும் "கண்ணாத்தாள்".. நாட்டரசன்கோட்டையில் அப்படி என்ன இருக்கு?
நகராட்சி தேர்தலில் குலுக்கல் முறையிலும் வேட்பாளர் தேர்வாகிறார்
சிவகங்கை: வித்தியாசமான முறையில் வேட்பாளரை தேர்வு செய்வதை பார்த்து, பிரதான அரசியல் கட்சிகள் வாயடைத்து போயுள்ளன.. சிவகங்கை மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதற்கு முன்பு எந்த உள்ளாட்சி தேர்தலும் இந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்காது.. அதிமுகவும் திமுகவும்தான் போட்டி போட்டுக்கொண்டு தேர்தலை சந்திப்பது வழக்கம்.. ஆனால் இந்த முறை இந்த மெகா கட்சிகளை முந்திக் கொண்டு கூட்டணி கட்சிகள் அதற்கு மேல் டஃப் கொடுத்து வருகின்றன.
தங்களுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டு வாங்குவது, இல்லாவிட்டால், அந்த குறிப்பிட்ட
வார்டுகளில் மட்டும் தனித்து போட்டியிடுவது போன்ற புது புது உத்தியை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கையில் எடுத்து வருகின்றன.

சுயேச்சைகள்
கேட்ட தொகுதியை தராவிட்டால், நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூட்டணியில் இருந்து விலகிவிட்டன பாஜக, பாமக கட்சிகள்.. அதேசமயம், ஒன்றிரண்டு சாதகமான இடங்களில் மட்டும் தனித்து போட்டி, மற்றபடி திமுக கூட்டணியில் இணைந்துதான் தேர்தலை சந்திக்கிறோம் என்று கூட்டணி கட்சிகள் சொல்கின்றன.. இவர்களுக்கு நடுவே சுயேச்சைகள் களமிறங்கி உள்ளனர்.. அதிலும் பல சுயேச்சைகள் வித்தியாசமானவர்களாக உள்ளனர்.. திருநங்கைகள் நிறைய பேர் போட்டி போடுகிறார்கள்.. இளம்பெண்கள் துணிச்சலுடன் களமிறங்குகிறார்கள்.

போட்டியின்றி தேர்வு
சில இடங்களில் பிரதான கட்சிகள் போட்டியிட ஒதுங்கிய நிலையில், அங்கு வேறு கட்சிகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.. கமுதியில் ஒரு இடத்தில் அப்படித்தான் திமுகவும், அதிமுகவும் மனுத்தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டார்.. சில இடங்களில் ஓட்டுக் கேட்டு போகாமல், சீட்டு குலுக்கி போட்டு தேர்வாகும் வேட்பாளர்களும் இருக்கிறார்களாம்.. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

12வது வார்டு
இங்கு வார்டு தேர்வு எப்போதுமே வித்தியாசமாக நடக்குமாம்.. 12 வது வார்டு கவுன்சிலரை ஒவ்வொரு முறையும் அங்கு வீற்றிருக்கும் அன்னை கண்ணாத்தாள் தான் தேர்வு செய்து தருவார் என்று வாக்காளர்கள் சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த 12 வார்டுகளில் 6571 பேர் வசிக்கின்றனர்... இதில் 5652 வாக்காளர்கள் உள்ளனர். 12வது வார்டு எப்போதும் ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு தான் ஒதுக்கப்படும்.

கண்ணாத்தாள்
ஆனால் இங்கு எப்போதுமே போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதிவிடுவார்கள்.. கண்ணாத்தாள் அதாவது முளைக்கொட்டு திண்ணை கோயிலில் அம்மன் சந்நிதி முன்பு அந்த சீட்டுக்களை குலுக்கி போடுவார்கள்.. அதில் இருந்து முதலில் வரும் நபரை தான் போட்டியின்றி தேர்வு செய்வார்கள்... எப்போதுமே இதுதான் அங்கு நடைமுறையாம்.. இந்த முறையும் சீட்டில் பெயர் எழுதி கொண்டு, வேட்பாளர்கள் எல்லாரும் கண்ணாத்தாளிடம் சென்றார்கள்..சீட்டை குலுக்கி போட்டு போட்டுவிட்டனர்.. அதன்படி ஒரு வேட்பாளரும் தேர்வாகிவிட்டார்.

அம்மன் சீட்டு
60 வருடமாகவே இந்த நடைமுறை உள்ளதாம்.. இந்த முறை 12வது வார்டில் போட்டியிட 13 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.. அம்மன் முன்பு சீட்டை குலுக்கி போட்டு எடுத்ததில், பெண் வேட்பாளர் பெயர் வந்திருக்கிறது.. அதனால் அந்த பெண்தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.. வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டாலே கிட்டத்தட்ட அவர்தான் வெற்றியாளரும் ஆவார்.. இந்த நடைமுறை ஆச்சரியத்தை தந்தாலும், வழக்கமாக தேர்தல் களத்தில் நடக்கும் பூசல், தகராறு, போன்றவைகள் இல்லாமல் இருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.












Click it and Unblock the Notifications