சிவகங்கை ஆச்சரியம்.. மண்ணை தோண்ட தோண்ட பொக்கிஷம்.. கல்லை கழுவினால்? மகிழ்ச்சியில் துள்ளிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், வைகை ஆற்றில் திருப்பாச்சேதி மற்றும் முத்தனேந்தல் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை பணிகள் முடிந்துவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, குடிநீர் பிரச்சனையும் தீரும் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு ஆச்சரிய சம்பவம் அங்கு நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் சமீபகாலமாகவே கடல் அலையின் சீற்றம் காணப்படுகிறது.. இந்த சீற்றம் காரணமாக, கடற்கரையில் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு அரிப்பு ஏற்பட்டிருப்பதால், இது சம்பந்தமான ஆய்வுகளில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.

Sivaganga Sivagangai statue

திருச்செந்தூர் பொக்கிஷம்

மற்றொருபுறம் கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்கள், திருச்செந்தூரின் கடலோரங்களில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.. குறிப்பாக, கல் சிலைகள், சிமெண்ட் சிலைகள், மரத்தினால் செய்யப்பட்ட சிலைகள் அதிகமாக தென்பட்டு வருகின்றன.. ஒவ்வொரு சிலைகளும், கடற்கரையில் திடீரென எழுந்து நிற்பதை பார்க்கும்போதெல்லாம் பக்தர்கள் பரவசமாகிறார்கள்..

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்திலும் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. திருபுவனம் வட்டம், திருப்பாச்சேத்தி ஊராட்சியில் உள்ள வைகை ஆற்றில், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.. கோடை காலம் நெருங்கிவிட்டதால், மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய தண்ணீரை சேமித்து, விவசாயத்துக்கும், குடிநீர் உபயோகத்துக்கும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த முடிவாகியிருக்கிறது.

எனவே, இதற்கான தடுப்பணையானது, வைகை ஆற்றில் திருப்பாச்சேதி மற்றும் முத்தனேந்தல் பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் பொதுமக்களால் நம்பப்படுகிறது.. தற்போது இதற்கான பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

சிவகங்கை தடுப்பணை பணிகள்

இந்நிலையில், வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கல் ஒன்று தடுத்துள்ளது.. எனவே, அந்த கல்லை எடுத்து போட முயன்றனர்.. ஆனால், அந்த கல்லை லேசில் எடுக்கமுடியவில்லை.. அளவு பெரியதாக இருந்ததால், கூடுதலான பணியாளர்களை கொண்டு, அந்த கல்லை வெளியே எடுக்க முயற்சித்தனர்..

அப்போதும் முடியாததால், பெரும் சிரமத்துடன், அனைத்து பணியாளர்களும் சேர்ந்து , அந்த கல்லை வெளியே எடுத்துள்ளனர். ஆனால் அந்த கல் முழுவதிலும் மண் படிந்திருந்தால், அதனை கழுவி பார்த்துள்ளனர்..

திடீரென குவிந்த மக்கள்

அப்போது, கோயில் அம்மன் சிலை போலவே இருந்திருக்கிறது. இந்த தகவல் சுற்றுவட்டாரத்தில் பரவியதுமே, பொதுமக்கள் அங்கே திரண்டு வந்துவிட்டார்கள்.. அம்மன் சிலையை போலவே இருப்பதை கண்டு, வியந்து நின்றார்கள்.. அந்த பகுதியே திடீரென பரபரப்பாகிவிட்டதால், தகவலறிந்து வந்த போலீசார் சிலையை ஆராய்ச்சியாளர்களிடம் கொண்டு சென்றார்கள்..

அதனை ஆய்வு செய்துவிட்டு, 7ம் நூற்றாண்டை சேர்ந்த சிலையாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.. எனினும், சிலையின் வடிவம் என்ன? எதை குறிக்கிறது, சிலையின் பூர்வீகம் என்ன? என்பது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்களாம்.. தடுப்பணை பணியின்போது, அம்மன் சிலையை போலவே, கற்சிலை தென்பட்டதை கண்டு பொதுமக்கள் சிலிர்த்து போயிருக்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+