சிவங்கை தொகுதி: வெல்லப் போகும் 'சீமை' ராஜா யார்? காங்கிரஸ் சரித்திர சாதனை 11-வது முறை தொடருமா?
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் 10 முறை வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தமது கோட்டை என மீண்டும் நிரூபிக்குமா என்பது எதிர்பார்ப்பு.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: திருமயம்,
ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி). புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது சிவகங்கை லோக்சபா தொகுதி.

சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள்: ஆண்கள்- 8,02,283; பெண்கள்- 8,31,511. 3-ம் பாலினத்தவர் 63.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
ப. சிதம்பரம்(காங்கிரஸ்) 3,34,348
இராஜ கண்ணப்பன் (அதிமுக) 3,30,994
பர்வத ரஜினா பாப்பா(தேமுதிக) 60,054
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி. ஆர். செந்தில்நாதன்(அதிமுக) 4,75,993
சுப. துரைராஜ்(திமுக) 2,46,608
எச். ராஜா(பாஜக) 1,33,763
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)1,04,678
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கார்த்தி சிதம்பரம்(காங்கிரஸ்) 5,66,104
எச். ராஜா (பாஜக) 2,33,860
வி. பாண்டி(அமமுக) 1,22,534
வி. சக்தி பிரியா (நாம் தமிழர் கட்சி) 72,240
கவிஞர் சினேகன் (மக்கள் நீதி மய்யம்) 22,93
2024-ம் ஆண்டு களத்தில்..
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)
சேவியர் தாஸ் (அதிமுக)
தேவநாதன் யாதவ்( பாஜக)
எழிலரசி (நாம் தமிழர் கட்சி)
சிவகங்கை தொகுதி நிலவரம் என்ன?: 1980-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்ச்சியாக வென்ற காங்கிரஸின் கோட்டை சிவகங்கை தொகுதி. இத்தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம், 7 முறை வெற்றி பெற்றுள்ளார். திமுக 2 முறையும் அதிமுக 2 முறையும் வென்றுள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் மொத்தம் 10 முறை (தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட) வென்றுள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட போதும் கூட சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெற்ற தொகுதி. ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிட்டிங் எம்பியாக உள்ளார்.
மீண்டும் கார்த்தி சிதம்பரமே இம்முறையும் களம் காண்கிறார். சிவகங்கை தொகுதியில் பாஜகவும் காலூன்றுவதற்காக மூத்த தலைவர் எச்.ராஜாவை களமிறக்கி பார்த்தது. இம்முறை தேவநாதன் யாதவை களமிறக்கி இருக்கிறது. கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 70,000 வாக்குகளைப் பெற்ற தொகுதி. வறட்சியான பகுதியான சிவகங்கைக்கு காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டம் பிரதான கோரிக்கை. சிவகங்கை தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு அதிகப்படுத்த வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பு. குறிப்பாக கிரானைட் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்கின்றனர் வாக்காளர்கள். காளையார் கோவில் தேசிய நூற்பாலையை மீண்டும் இயக்க கோருகின்றனர்.












Click it and Unblock the Notifications