கோழி இறகு தலையில் செருகி.. இரவில் கோயில் கண்மாயில் நடந்த ஹைலைட்.. சிலிர்ப்பூட்டிய சிவகங்கை.. சூப்பர்ல
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன முக்கியத்துவம் இந்த திருவிழாவில்?
விநோத திருவிழாக்கள் என்பது இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் உண்டு..

சித்திரை திருவிழா: குறிப்பாக சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடத்தப்படுவதுண்டு.
இதுபோன்ற திருவிழாக்களில், ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது வழக்கமாகும். நள்ளிரவு நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு துவங்குவதுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்படும். பிறகு, விடிய விடிய கறிவிருந்து தயாராகும். காலையில், இந்த கறிவிருந்தினை சுவாமிக்கு படையல் போட்டு, பிறகு, விழாவில் பங்கேற்கும் ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும்.
பொங்கல்: இதுபோலவே, தமிழகத்தில் நடைபெறும் விநோத திருவிழாக்கள் தென்மாவட்டங்களிலும் அதிகம் நடக்கும்.. நேற்றுகூட, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கீழக்குறிச்சிப்பட்டியில் ஒரு விநோத திருவிழா நடந்துள்ளது.. இந்த கிராமத்தில், பொன்னழகி அம்மன் கோயில் ஒன்று பழமையானது.. இந்த கோயிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும்.

பங்குனி திருவிழாவையொட்டி, கோயிலிலுள்ள பொன்னழகி அம்மனுக்கு ஆடு, சேவல் பலியிட்டு பொங்கல் வைப்பது வழக்கம். அதன்படியே, இப்போதும் பக்தர்கள், ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள்..
கோழி இறகு: இந்த திருவிழாவில் ஹைலைட்டே சேறு பூசும் நிகழ்வுதான். இந்த கோயிலுக்கு அருகிலேயே கண்மாய் ஒன்று உள்ளது.. இந்த கண்மாயில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் புரண்டு உடம்பில் சேற்றை பூசிக் கொள்வார்கள்..
பிறகு, மாலை அணிந்து தலையில் கோழி இறகையும் வைத்துக் கொண்டு, சாமியாடுவார்கள். கண்மாயிலிருந்து கோயில் வரை ஆடிக்கொண்டே வருவார்கள். பிறகு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
பக்தர்கள்: நேற்றைய தினமும் இந்த திருவிழாவில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உடலில் சேறுபூசி, தலையில் கோழி இறகு வைத்து ஆடினார்கள்..
இதற்கு காரணம், சேற்றினை உடலில் பூசிக்கொள்வதால், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.. அத்துடன், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இப்படி கோழி இறகினை தலைல் வைத்து வழிபடுவதால் குடும்ப உறவுகள் தழைக்குமாம்.. நினைத்த காரியங்களும் கைகூடும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
ஆர்வம்: நேற்றைய தினம், சுற்றுவட்டாரத்திலுள்ள கீழக்குறிச்சிபட்டி, செல்லியம்பட்டி, மேட்டாம்பட்டி, தேவன்பட்டி, கருப்புக்குடி, கொள்ளுப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, வார்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications