கரையான் சாப்பிட்ட ரூ.1 லட்சம்..ஓடோடி வந்து ராகவா லாரன்ஸ் தந்த சர்ப்ரைஸ்.. சிவகங்கை பெண்ணுக்கு ஹேப்பி
சிவகங்கை: தகர பெட்டியில் இருந்த ரூ.500, 200, 50, 20 நோட்டுக்கள் அரிக்கப்பட்டு கிடந்தன. ஏழை தம்பதியினர், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக உண்டியலில் சேமித்த ரூ.1 லட்சத்தையும் கரையான் அரித்துவிட்டன.. இந்த கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 1லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த உதவியை தம்பதியினர் எதிர்பார்க்கவேயில்லை.. என்ன நடந்தது சிவகங்கையில்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி ஊராட்சி கக்கினியார்பட்டியை சேர்ந்த தம்பதி குமார் - முத்துக்கருப்பி.. இந்த தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.. இந்த கூலி வேலை செய்து தங்களது குழந்தைகளை காப்பாற்றி வரும் நிலையில், மிச்சமுள்ள பணத்தை தகர உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளனர்..

கரையான் அரித்த பணம்
ஒரு தகர உண்டியலில் ரூ.500 தாள்களாக ரூ.1 லட்சம் வரை சேமித்து வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார்கள்.. 30 வயதான முத்துக்கருப்பி, 2 நாட்களுக்கு முன்பு குழந்தைகள் காதணி விழாவுக்காக உண்டியலை திறந்து பார்த்தபோது, பல 500 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.
சமீபத்தில் பெய்த மழையால் பணம் முழுவதும் நனைந்ததுடன், கரையான் அரித்திருக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக தகர பெட்டியில் சேகரிக்கப்பட்ட பணத்தில், ரூ.500, 200, 50, 20 நோட்டுக்களை கரையான் அரித்துள்ளது.
நம்பிக்கை தந்த வங்கி அதிகாரி
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், தாசில்தார் சிவராமனிடம் தெரிவித்து, முன்னோடி வங்கி மூலம் ரிசர்வ் வங்கியிடம் கருணை அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர முயற்சிக்கு உத்தரவிட்டார்.
அதன்படியே, முத்துக்கருப்பியை வங்கி மேலாளரை அழைத்து சென்றபோது, கிழிந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி தர வங்கிகளுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ரிசர்வ் வங்கிக்கு முறையாக கடிதம் அனுப்பி, அவர்களின் அறிவுரைபடியே செயல்பட முடியும், எனினும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் உறுதி தந்தனர்.
நெகிழ்ச்சியை தந்த ராகவா லாரன்ஸ்
பணத்தை பெற்றுத் தர வங்கியினரும், உதவி செய்வதாக சொன்னாலும், பிள்ளைகளின் காதணி விழாவை எப்படி நடத்துவது என்று புலம்பிக்கொண்டேயிருந்தார் முத்துக்கருப்பி.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், முத்துக்கருப்பி மற்றும் அவரது குடும்பத்தினரை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து ரூ. 1லட்சம் வழங்கி உதவினார். இது குறித்த வீடியோவையும் லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.. நிதியுதவி செய்த ராகவா லாரன்சுக்கு, முத்துக்கருப்பி நன்றி தெரிவித்துள்ளார்.
-
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications