சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அழுதுகொண்டே ஒவ்வொரு மாத்திரையை விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி பெண்.. "பஞ்சவர்ணம்" டார்ச்சர்

சிவகங்கை அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்

Google Oneindia Tamil News

சிவகங்கை: அழுதுகொண்டே மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் ஒரு பெண்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த மேலிட அதிகாரியின் டார்ச்சர்தான்..!

Recommended Video

    வாட்டர் பாட்டிலில் குடித்து கொண்டே.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண் ஊழியர் - அதிர்ச்சி வீடியோ

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது இரும்பூர் என்ற கிராமம்.. இங்கு அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதாக தெரிகிறது.. இந்த அங்கன்வாடியில் வேலை பார்ப்பவர்தான் சுதா..

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு கடந்து வந்த பாதை - தற்கொலை முதல் சிபிஐ விசாரணை வரை தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு கடந்து வந்த பாதை - தற்கொலை முதல் சிபிஐ விசாரணை வரை

    அங்கன்வாடி மையம்

    அங்கன்வாடி மையம்

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி மையத்தை இடமாற்றம் செய்வது குறித்து, ஒருங்கினைந்த குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பஞ்சவர்ணம் என்பவரிடம் சுதா பேச வந்துள்ளார்.. ஆனால், சுதாவை பஞ்சவர்ணம் தாறுமாறாக பேசிவிட்டதாக தெரிகிறது.. மிக கேவலமாகவும், தன்னை பற்றி அவதூறாகவும் பேசியதால் சுதா அதிர்ந்து போய்விட்டார்..

    வீடியோ

    வீடியோ

    அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார் சுதா.. ஒருகட்டத்தில் மனம் ஒடிந்த நிலையில், தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுவிட்டார்.. அதனை வீடியோகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார்.. சுதா உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்த, சக ஊழியர்கள் அவரை மீட்டு காளையார்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. பிறகு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.. இப்போது சுதா சீரியஸாக இருக்கிறார்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது..

    பழிவாங்கும் நடவடிக்கை

    பழிவாங்கும் நடவடிக்கை

    நடந்த சம்பவம் குறித்து பஞ்சவர்ணத்திடம் கேட்டபோது, "வாடகை கட்டிடத்தை மாற்றுவது குறித்து விளக்கமாக கடிதம் தர சொன்னேன்.. மற்றபடி வேற எதுவும் நான் பேசவில்லை.. இப்படி தற்கொலை வரை போவார் என்று தெரியாது.. ஏதோ பழிவாங்கும் நோக்குடன் இப்படி நடந்ததாகவே தெரிகிறது" என்றார்.. இரு தரப்பிலும் வேறு வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மை காரணம் என்னவென்று தெரியவில்லை...

    சமாதானம் - போராட்டம்

    சமாதானம் - போராட்டம்

    இதனிடையே, சுதா தற்கொலை முயற்சிக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் ஆபீஸை சக ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடியாகவே கிளம்பி வந்துவிட்டார்.. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்... ஆனாலும், ஊழியர்கள் சமாதானம் ஆகவில்லை.. அவர்களை சமாதானம் செய்யவும் முடியவில்லை.. தொடர்ந்து போராட்டத்தை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. இதனிடையே மாத்திரையை விழுங்கி கொண்டே தற்கொலைக்கு முயன்ற சுதாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Sivagangai anganwadi worker commits suicide due to higher officers pressure
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X