சிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
சிவகங்கை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர் சந்திரன். இவர் கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். சந்திரன் 2001-ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications