என்னாது.. உயிருக்கு ஆபத்தா? எல்லா சர்வாதிகாரிகளும் இப்படித்தான் சொல்வாங்க.. கார்த்தி சிதம்பரம் நறுக்
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி தந்துள்ளார்
சிவகங்கை: உலகிலுள்ள அனைத்து சர்வாதிகாரிகளும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அவ்வப்போது பிரச்சாரம் செய்வது வாடிக்கையான ஒன்று என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
4 நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.. அப்போது மோசமான வானிலை நிலவியது...
இதனால் 20 நிமிடங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, பஞ்சாப்பிற்கு ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து, சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்றார்..

பிரதமர்
அப்போது ஹூசைனிவாலா பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமரின் கார், பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கான்வாய் உள்ளிட்டவை சுமார் 15- 20 நிமிடங்கள் பாலத்திலேயே சிக்கி கொள்ள நேரிட்டது.. இதையடுத்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார்.,. இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திவிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக பாய்ந்துள்ளது.. கடுமையாக அக்கட்சியை குற்றஞ்சாட்டியும் வருகிறது.

பேட்டி
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "15 நிமிடங்கள் டிராபிக் ஜாமில் சிக்குவது என்பது நம் எல்லோருக்கும் தினசரி அனுபவமாகும்" என்று பதிவிட்டிருந்தார்.. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மீண்டும் பிரதமரின் பாதுகாப்பு குறித்து கருத்து சொன்னார்.

பதவி
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியாவிலேயே யாருக்கும் மாற்று கருத்து இல்லை.. அந்த பதவியில் யார் இருந்தாலும் அவரை பாதுகாக்க வேண்டும்.. ஆனால் அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யார்கிட்ட இருக்கு? எஸ்பிஜி என்ற காவல்படையிடம்தான் முழு பொறுப்பு தந்திருக்காங்க.. இந்த எஸ்பிஜிக்கு 3 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் தரப்பட்டிருக்கிறார்கள்.. அந்த 3 ஆயிரம் பேருக்கு பட்ஜெட், ஒரு வருடத்தில் 600 கோடிக்கு மேலே.. இந்த 3 ஆயிரம் பேருக்கு வேலையே, பிரதமரை பாதுகாப்பது மட்டும்தான்.. வேற வேலையே கிடையாது.. வேற யாருக்கும் எஸ்பிஜியும் கிடையாது..

ஹெலிகாப்டர்
ஆனால் பஞ்சாப்பில் ஹெலிகாப்டரில் போக முடியாமல், ரோட்டில் பயணம் மேற்கொள்கிறார்.. அதுக்காக உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது.. இது சம்பந்தமான பஞ்சாப் அரசு விசாரித்து கொண்டிருக்கிறது.. உலகிலுள்ள எல்லா சர்வாதிகாரிகளும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அவ்வப்போது பிரச்சாரம் செய்வது வழக்கம்.. என்னை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் அசௌகரியம் ஏற்பட்டிருக்கலாம். அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் போக இடையூறு வந்திருக்கலாம்.. அவ்வளவுதான்.. மற்றபடி உயிருக்கு ஆபத்து இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அங்கே எதுவும் நடந்துவிடவில்லை...

விழிப்புணர்வு
இங்கே ஊரடங்கை உடனடியாக செயல்படுத்தாமல் படிப்படியாக செயல்படுத்துவது சரியான அணுகுமுறை.. பொங்கலுக்கு நகர் புறங்களில் இருந்து, கிராமத்திற்கு வருபவர்களால் கொரானா பரவும் அபாயம் உள்ளது.. எல்லாரும் மாஸ்க் போட்டே ஆக வேண்டும்.. தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.. அதனால் பொதுமக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று கார்த்தி சிதம்பரம் தன்னுடைய பேட்டியில் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications