Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயுடன் பழகியதால் ஆத்திரம்.. சிவகங்கை மருத்துவமனையில் மருந்தாளுரை குத்திக்கொன்ற இளைஞர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தாயுடன் பழகியதால் ஆத்திரம், சிவகங்கை மருத்துவமனையில் கொன்ற இளைஞர்-வீடியோ

    சிவகங்கை: சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஓட ஓட விரட்டி மருந்தாளுநரை கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில், தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தவர் தமிழ்செல்வன். இன்று காலை 10 மணிக்கு இவர் வழக்கம்போல் பணியிலே இருந்தார்.

    வெளிநோயாளிகளுக்கு தமிழ்செலவன் மருந்துகளை வழங்கி கொண்டிருந்தார். அங்கு ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக மருந்துகளை வாங்கிச் சென்று கொண்டிருந்தனர்

     தாயுடன் பழக எதிர்ப்பு

    தாயுடன் பழக எதிர்ப்பு

    சிவகங்கை அருகே உள்ள ஒப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், மருந்தாளுநர் தமிழ்செல்வனிடம் தனது தாயுடன் பழகக்கூடாது என்ற கோணத்தில் பேசிக்கொண்டிருந்தாராம்.

     குத்திக்கொலை

    குத்திக்கொலை

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார், கத்தியுடன் விரட்டியுள்ளார். இதனால் மருந்தாளுநர் தமிழ்செல்வன் தப்பி ஓடிஉள்ளார். இருந்தாலும் அருண்குமார் விரட்டி, விரட்டி சென்று தமிழ்செல்வனை 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

     மடக்கிய பொதுமக்கள்

    மடக்கிய பொதுமக்கள்

    இந்த படுகொலையை சிகிச்சைக்காக வந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அருண்குமாரை மடக்கிய பொதுமக்கள், அவரை ஓடவிடாமல் ஒரு அறைக்குள் வைத்து பூட்டினர்.

     கொலையாளி கைது

    கொலையாளி கைது

    இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், அருண்குமாரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வனின் உடலை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டும் வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவத்தால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+