கட்டி வைத்து கொடூர தாக்குதல்.. சிவகங்கை இளைஞர் கஸ்டடி மரணத்தில் தாய் அதிர்ச்சி தகவல்
சிவகங்கை: சிவகங்கை கோயிலில் நகை திருடிய புகாரில் அங்கு பணியாற்றிய தற்காலிக ஊழியரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. எதிர்பாராத விதமாக அவர் கஸ்டடியிலேயே உயிரிழந்த நிலையில், அந்த நபரை காவல்துறை கட்டி வைத்து கண் மூடித்தனமாக தாக்கியதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அங்கு அஜித் (வயது 28) என்பவர் கோயிலின் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வந்தார். பொதுவாக அந்த கோயிலில் வெள்ளிக்கிழமை நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிகிதா (வயது 42) தன் அம்மா சிவகாமியுடன் வெள்ளிக்கிழமை மதியம் கோயிலுக்கு சென்றுள்ளார். நிகிதா தன் கார் சாவியை அஜித்திடம் கொடுத்து, வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி, தன் அம்மாவை கோயிலுக்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார்.
அஜித் தனக்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால், அருகில் இருந்த மற்றொருவரிடம் காரை நிறுத்த சொல்லியதாக கூறப்படுகிறது. நிகிதா கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்தபோது, தன் பையில் இருந்த தாலி செயின், வளையல், தங்க மோதிரம் உள்ளிட்ட 9.5 சவரன் தங்க நகை காணாமல் போனது பற்றி தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த நிகிதா இதுகுறித்து கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் காவலாளி அஜித்தை விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவரும் தனக்கு எதுவும் தெரியாது என்று காவல்துறையிடம் கூறியுள்ளார்.
இதனால் அஜித்தை காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காவல்துறையின் ஸ்பெஷல் டீம் அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணையின் போது அஜித் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணையில் அஜித் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர், 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அஜித்தின் தம்பி நவீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காலை 6 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அண்ணனை அழைத்து சென்றது எதுவும் தெரியாது. திடீரென காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்து பீரோவை திறந்து பார்த்து என் செல்போனை வாங்கி என்னையும் டெம்போவில் அழைத்து சென்றனர். காலை, மதியம் சாப்பாடு வாங்கி தந்தனர்.
என் கண் முன்னாடியே அண்ணனை தொடர்ந்து அடிச்சாங்க. பிறகு அரைமணி நேரத்துக்கு என்னை அடித்தார்கள். மதியத்தில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக அடித்தனர். மொத்தம் 5 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். என்னை மாலை விடுவித்துவிட்டனர். திடீரென காவல்துறை என் அண்ணன் இறந்துவிட்டதாக கூறினார்கள்." என்றார்.
அஜித்தின் அம்மா செய்தியாளர்களிடம், "அவனை எங்கு வைத்து விசாரித்தார்கள் என்று கூட எங்களுக்கு தெரியாது சார். இப்போது பிணமாக காட்டுகிறார்கள். என் மகன் நன்றாக தான் இருந்தான். கோயிலில் வைத்தே அவனை கட்டிப் போட்டு கடுமையாக அடித்துள்ளனர். அங்கே ரத்தக்கறை உள்ளது. அநியாயம் செய்கிறார்கள். இது மிகவும் கொடுமை. இப்படி எல்லாம் செய்யக் கூடாது." என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications