பள்ளி வாகனம் கவிழ்ந்து 7ஆம் வகுப்பு மாணவன் பலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7ஆம் வகுப்பு மாணவன் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய வாகனத்தை பள்ளி நிர்வாகம், அனுமதி பெறவில்லை என்ற தகவலும் அம்பலமாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே சருகனேந்தல் பகுதியில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7ஆம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

பள்ளி வேன் விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்துக்குள்ளானது பள்ளி வாகனமே இல்லை என்றும் அந்த வாகனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்றும் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
பள்ளியின் சார்பாக பயன்படுத்தப்படும் எந்தவொரு வாகனமும் போக்குவரத்துத் துறையின் சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த வேனை அனுமதி பெறாமல், பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மேலும், வழக்கமான ஓட்டுநருக்கு பதிலாக, வேறு ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவன் பலியாக காரணமான விபத்தில் சிக்கிய வாகனத்துக்கு பள்ளி நிர்வாகம் அனுமதி பெறாதது அம்பலமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த அந்த வேன் ஓட்டுநரைச் செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications