குன்றக்குடி மண்ணே இருட்டடைஞ்சு போச்சு.. கதறி பிளிறி பலியான சுப்புலட்சுமி! கண்ணீர்க் கடலில் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : நேற்று நள்ளிரவு நடந்த தீ விபத்தில் காயம் அடைந்த குன்றக்குடி கோவில் யானை இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகே யானை உயிரிழந்ததாக பரபரப்பு புகாரை முன் வைக்கின்றனர் பக்தர்கள்..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு ஆத்தங்குடியைச் சேர்ந்த நகரத்தார் சுப்புலட்சுமி என்ற பெண் யானையை பரிசாக கொடுத்தார்.

kundrakudi elephant


கோவில் பராமரிப்பில் யானை வளர்ந்து வந்தது. தற்போது அந்த யானையின் வயது 53. இந்நிலையில் நேற்று கோவிலின் அடிவாரத்தில் கட்டி கிடந்த யானை அப்பகுதியில் நேர்ந்த தீ விபத்தால் படுகாயம் அடைந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் யானையை மீட்டு கோவில் மடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களால் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் யானை சுப்புலட்சுமி இன்று அதிகாலை 2 மணிக்கு மரணம் அடைந்தது. இதனை அறிந்த முருக பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் பலரும் கோவில் யானை சுப்புலட்சுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகே யானை உயிரிழந்ததாக பரபரப்பு புகாரை முன் வைக்கின்றனர் பக்தர்கள். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் வளர்க்கப்பட்ட வந்த யானை சுப்புலட்சுமி அப்பகுதி மக்களுக்கும் பக்தர்களுக்கும் மிகவும் பிடித்தமான யானையாகும். தினமும் குளித்து முடித்துவிட்டு கோவில் அருகே பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். சுப்புலட்சுமியை பார்ப்பதற்கென்றே பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வருவார்கள். இந்த நிலையில் கோவிலின் அருகே யானை வளர்க்கப்பட்டு வந்தது.


மலைக் கோயிலுக்கு செல்லும் பாதைக்கு அருகே இரும்பு சீட் மூலம் பந்தல் அமைக்கப்பட்டு அதில் சுப்புலட்சுமி பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் தகர சீட்டின் உட்பகுதியில் தென்னை ஓலைகளை கொண்டு கொட்டகை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுப்புலட்சுமி பராமரித்து வந்த பாகன் இல்லாத நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த சுப்புலட்சுமி தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் பிளிறி உள்ளது.

ஒரு கட்டத்தில் யானையின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதை அடுத்து சுப்புலட்சுமி சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியது. யானை ஓடுவதை கண்ட அருகில் இருந்தோர் வனத்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து ஓடிச் சென்ற யானை சுப்புலட்சுமியை, அதன் பாகன் சமாதானப்படுத்தி கோயில் மடத்திற்கு அழைத்து வந்தார்.

உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. யானை சுப்புலட்சுமி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் பக்தர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தொடர்ந்து அரசு சார்பிலும் பக்தர்கள் சார்பிலும் கண்ணீர் மல்க யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் தான் யானை சுப்புலட்சுமி மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு தனியாக கான்கிரீட் கூரை அமைத்து ஷவர் நீச்சல் குளம் என பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் யானை சுப்புலட்சுமியை முறையாக பராமரிக்காமல், தகரக் கொட்டையிலும் தென்னை ஓலை கொட்டகையிலும் பராமரித்து வந்ததாகவும், இதன் காரணமாகவே தீப்பிடித்து கொடூர மரணத்தை சுப்புலட்சுமி சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+