Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10 ஓகே.. ஆனா காலி பாட்டிலை எங்கே வைக்கிறது? டாஸ்மாக்கில் மாற்றம் வருதா? தமிழக அரசு முடிவென்ன?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: காலிப் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் போராட்டத்தையும் அதிரடியாக அறிவித்திருப்பதால், இது சம்பந்தமாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tasmac

அதன்படி, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலி பாட்டில்கள்: இந்த திட்டத்தின்படி மதுபானத்தின் விலையை விடக் கூடுதலாக பத்து ரூபாய் செலுத்தி மதுபானப் பாட்டில்களை வாங்கிவிட்டு அதன் பின்னர் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும்போது கூடுதலாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் தற்போது செயல்பட்டு வருகிறது.. பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. எனினும், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது... திரும்ப பெறும் பாட்டில்களை விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிகிறது.

டாஸ்மாக் ஊழியர்கள்: ஆனால், இந்த திட்டத்துக்கு, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்கள் தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.. இந்த திட்டத்தை கொண்டுவந்தால், அதனால் தங்களுக்கு ஏற்படும் பாதிக்கப்படும் குறித்து விலாவரியாக எடுத்துக்கூறி இந்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வருகிறார்கள்.

"மது பான பாட்டில்களை வாங்கிய அதே நாளில், அதே கடையில், வாடிக்கையாளர்கள் திருப்பி கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதால், இது தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் தேவையற்ற மோதல் ஏற்படுகிறது... அதுவும் இல்லாமல், மது பாட்டில்கள் மீது இதற்காக ஸ்டிக்கர் ஒட்டுவது, மார்க்கர் பேனா மூலம் குறியிடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

புதிய நடைமுறை: இதனை தவிர, காலி பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க, டாஸ்மாக் கடைகளில் போதிய இட வசதி, ஏற்கனவே ஆள்பற்றாக்குறை பிரச்சினையும் உள்ளது. இதற்கான வசதிகள் எதுவுமே செய்து தராமல், திடீரென புது நடைமுறையை பின்பற்றும்படி சொன்னால் எப்படி?" என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நேற்றுகூட, சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலக்குழுக் கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.. மாநிலத் தலைவர் பொன்முடி பொதுச் செயலாளர் திருச்செல்வம், மாவட்டத் தலைவர் திருமாறன், செயலாளர் குமார், பொருளாளர் பாண்டி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்கள்: கூட்டத்துக்கு பிறகு திருச்செல்வன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போன்று ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். பள்ளத்தூரில் பணியின் போது கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அர்ஜூனன் மனைவிக்கு கருணை அடிப்படையிலான பணி இதுவரை வழங்கவில்லை. உடனடியாகப் பணி வழங்க மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முழுமையாகப் பலனளிக்கவில்லை. எங்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊழியர்களின் சிரமத்தை அறியாமல் காலிப் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.. அதை கைவிட வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்" என்றனர்.

டாஸ்மாக் மாற்றம்?: ஆக, சிஐடியு தொழிற்சங்கம் மட்டும் இல்லாமல், டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள இதர தொழிற்சங்கங்களையும் இணைத்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் தமிழக அரசு இதுசம்பந்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+