திருப்புவனம் அஜித் குமாரை போலீசார் அடித்ததை வீடியோ எடுத்த நபருக்கு ஆபத்து?
சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில், முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவது கோவில் பணியாளரான சக்தீஸ்வரன் செல்போனில் எடுத்த அந்த வீடியோதான். இந்த வீடியோவில் மஃப்டியில் தனிப்படை போலீசார் அஜித் குமாரை பிளாஸ்டிக் பைப், லத்தியால் சரமாரியாக தாக்கியது பதிவாகியிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கும், தன் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தனிப்படை போலீசாரில் ராஜா என்பவர் ரவுடிகளிடம் தொடர்பில் உள்ளவர் என்றும், அவரால் எனக்கும் என்னை சார்ந்தவருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் குமார் மரண வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் 27 வயது இளைஞர் அஜித் குமாரை போலீசார் அடித்தே கொன்ற சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷித் ராவத் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய மதுரை நீதிமன்றம், நீதிபதி ஜான் சுந்தர்ராஜ் தலைமையில் விசாரித்து, ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று ஜான் சுந்தராஜ் விசாரணையானது நேற்று தொடங்கியது. முதல் நாளான விசாரணையானது 11 மணி நேரம் நடந்தது. மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர்ராஜ், திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை அறையில் 11 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இந்த விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள், கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள், பதிவு செய்யப்பட்ட சிஎஸ் ஆர் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கோவிலில் அஜித் குமாரை போலீசார் சரமாரியாக தாக்கியதை, அங்கு கழிவறையில் இருந்தபடி ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்த வீடியோவும் போட்டு காண்பிக்கப்பட்டது.
திருப்புமுனையை ஏற்படுத்திய வீடியோ
இந்த வீடியோவே இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதாவது இளைஞர் அஜித் குமாரை நகை திருடியதாக கைது செய்து அழைத்து சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு மானாமதுரையில் இருந்து போலீசார் வந்து அஜித் குமாரை அழைத்து சென்று கோவிலில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இந்த சமயத்தில் அவர் தாக்கப்பட்ட சத்தம் அப்பகுதியில் கேட்டதாக கூறப்படுகிறது.
அதாவது லத்தி, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவற்றால் போலீசார் அஜித் குமாரை தாக்கும் போது சத்தம் கேட்டதாகவும், அஜித் குமார் அலறும் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்களும் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். இந்த சத்தம் கேட்டுத்தான் கோவிலில் கழிவறைக்கு சென்று அங்கிருந்தபடி ஊழியர் சக்தீஸ்வரன் எட்டி பார்த்துள்ளார். அப்போது அஜித் குமார் சரமாரியாக தாக்கப்படுவதை அவர் செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார்.
போலீஸ் டிஜிபிக்கு கடிதம்
எனினும் இதையும் போலீசார் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பயந்து போய் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறினார். இந்த நிலையில் தான் இந்த வீடியோவை காண்பித்ததால் எனக்கும் என் குடும்பத்தினருக்கு உயிருக்கு ஆபத்து உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
தனக்கும், தன் தன்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். தனிப்படை போலீசாரில் ராஜா என்பவர் ரவுடிகளிடம் தொடர்பில் உள்ளவர் என்றும், அவரால் எனக்கும் என்னை சார்ந்தவருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications