குமட்டும் ஆபாசம்.. தோளில் கை போட்டபடியே.. பெண்ணுக்கு "பயாலஜி" கிளாஸ்.. பிரபல டாக்டரை தூக்கிய போலீஸ்

ஆபாச வீடியோவை காட்டி மாணவியிடம் அத்துமீறி உள்ளார் பிரபல டாக்டர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: 17 வயது பெண்ணின் தோளில் கை போட்டுக் கொண்டே, மிரட்டலை விடுத்த பிரபல டாக்டரை போலீசார் தட்டி தூக்கிவிட்டனர்.. அதுவும் போக்சோவில்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் அந்த பெண்.. 17 வயது மாணவி ஆவார்.. திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.

இவரது அம்மா, காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ளார்... அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மாணவியின் அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுமாம்..

காரைக்குடி

காரைக்குடி

அதனால், காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம்.. அந்த மருத்துவமனை டாக்டர் மோகன்குமாருக்கும், மாணவியின் அம்மாவுக்கும் இந்த தொடர்பு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அதனால் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தை காட்டியே, அவரது வீட்டிற்கு டாக்டர் மோகன்குமார் அடிக்கடி வந்து போனதாக தெரிகிறது.. சில சமயம், மாணவியின் அம்மா ரூமிலேயே அவர் தங்கியிருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

அடிக்கடி டாக்டர் வீட்டுக்கு வருவதையும், அம்மாவின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் இருப்பதையும் கண்டுபிடித்த மாணவி, வேறு வழியில்லாமல் இந்த விஷயத்தை அவரது அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.. அவரும், தன் மனைவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் உறவு நீண்டு வந்துள்ளது.. மற்றொருபுறம், அந்த மாணவி ஸ்கூல் படிக்கும்போது, டாக்டர் மோகன்குமார் காரிலேயே அழைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

 அத்துமீறல்

அத்துமீறல்

அப்போது, மாணவியிடம் தன் வேலையை காட்டி உள்ளார்.. காரில் போகும்போது, மாணிவியின் தோளில் கை போட்டுக் கொண்டே அவரது அம்மாவுடன் நெருக்கமாக இருந்த போட்டோவை காண்பித்து, இதுபோல் தன்னுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.. அதற்கு மாணவி மறுக்கவும், அவரை சரமாரியாக தாக்கி அடித்துள்ளார்... இதற்கு பிறகு லாக்டவுன் போட்டுவிடவும், ஸ்கூல்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன..

 பயாலஜி

பயாலஜி

அதனால் மாணவி வீட்டிலேயே ஆன்லைன் கிளாஸில் பங்கேற்று படித்து வந்திருக்கிறார்.. அப்போதும் அந்த டாக்டர் வீட்டுக்கே வந்துவிட்டாராம்.. பயாலஜி சொல்லி தருகிறேன் என்று சொல்லி யூ டியூப்பில் ஆபாச வீடியோவை காண்பித்து, இதோ இப்படித்தான் இந்த பாடத்தில் வரும் என்று சொல்லி தந்து விளக்கி இருக்கிறார்.. அதுமட்டுமல்ல, தம்பி, தங்கையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோதுகூட, டாக்டர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டாராம்..

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இதெல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்து கொந்தளித்து போய்விட்டார் மாணவி.. அப்பாவிடம் புகார் சொல்லிக்கூட இந்த விஷயத்துக்கு விடிவு கிடைக்கவில்லையே என்று நினைத்து, நேராக போலீசுக்கே போய்விட்டார்.. அந்த டாக்டர் மீது ஆன்லைனிலேயே புகார் தந்தார்.. காரைக்குடி டிஎஸ்பி, காரைக்குடி மகளிர் இன்ஸ்பெக்டர் இருவருமே இந்த விசாரணையை உடனடியாக கையிலெடுத்தனர்.. இறுதியில் சம்பந்தப்பட்ட டாக்டரை கைது செய்து போக்சோவில் உள்ளே அடைத்தனர்.. அந்த டாக்டர் எலும்பு முறிவு ஸ்பெஷலிஸ்ட்டாம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+