விஜய் 6 மணிக்கு மேல் வெளியே வரமாட்டாரா? கடுமையான விமர்சனங்களுக்கு சத்தமின்றி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: தவெக தலைவரும் நடிகருமான விஜய், 6 மணிக்கு மேல் வெளியே வரமாட்டார் என சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தான் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தனது செயலால் பதில் கொடுத்துள்ளார் விஜய்.

சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும்போதே அரசியலுக்கு வந்துவிட்டார் விஜய். அவரை சினிமாவில் ரசிக்கும் ரசிகர்கள் பலருக்கும் கூட இதில் உடன்பாடு இல்லை. அதேநேரம், விஜய்யை முதலமைச்சராக பார்க்க ஆசைப்படும் அவரது ரசிகர்கள் அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறார்கள்.

Vijay Silences Critics with Action Visits Ajith Kumar s Family in Sivagangai Amid Social Media Backlash

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் விஜய். ஆளும் திமுக அரசை விமர்சித்து அவ்வப்போது அறிக்கையும் வெளியிட்டும் வருகிறார். இப்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

ஜனநாயகன் படம் வரும் 2026 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பது 2026 சட்டமன்ற தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னரே தெரியவரும் எனக் கூறப்படுகிறது. ஜனநாயகனே அவரின் கடைசிப்படம் என்றும் கூறப்படுகிறது.

விஜய் அதிகம் பேசமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட மிகவும் அமைதியாகவே இருப்பார். அப்படியான சுபாவம் கொண்டவருக்கு அரசியல் செட் ஆகாது என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆனால், தவெக மாநாட்டிலும், அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்திலும் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜய்.

அதே சமயம், பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காதது எதிர்க்கட்சியினர் வைக்கும் முக்கியமான விமர்சனமாக இருந்தது. ஆன்லைனில் கட்சி நடத்துகிறார் என விமர்சிக்கப்பட்டது. அதற்கு பதில் கொடுக்கும் விதமாக, ரோடு ஷோக்களை நடத்தி அதிர வைத்தார் விஜய். கோவை, மதுரையில் விஜய் வந்தபோது அமளிதுமளி ஆனது.

அதேபோல், 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது என வடிவேலு சொல்வது போல விஜய் 6 மணிக்கு மேல் நடிக்க மாட்டார். 6 மணி ஆகிவிட்டால் வீட்டிற்கு கிளம்பிவிடுவார். இரவு நேரங்களில் அவர் வெளி நபர்கள் யாரையும் சந்திக்கவும் மாட்டார். இதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வருகிறார் என்றும் ஒரு பேச்சு உலவுகிறது.

அண்மையில், பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா என்பவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது 'விஜயை மாலை 6 மணிக்கு மேல் யாராவது பார்த்தது உண்டா? மாநாடு நடத்தியபோதும் கூட 6 மணிக்கு முடித்துவிட்டு போய்விட்டார். 6 மணிக்கு மேல் அவர் யாரையும் சந்திக்க மாட்டார். ஷூட்டிங்கில் கூட 6 மணி ஆகிவிட்டால் கேரவனுக்கு போய்விடுவார். அதற்கு ஒரு காரணம் உண்டு' என பேசி இருந்தார்.

இந்நிலையில் தான் இன்று 7 மணியளவில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் சென்று, போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமாரின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் விஜய். கொல்லப்பட்ட அஜித் குமாரின் அம்மா, தம்பி ஆகியோருக்கு ஆறுதல் கூறியதோடு, நிதி உதவியும் வழங்கி உள்ளார். இதன் மூலம், விஜய் 6 மணிக்கு மேல் வெளியில் வரமாட்டார் என்ற விமர்சனத்துக்கு சத்தமில்லாமல் பதில் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+