திருமா கட்சியை வன்னியரசு அபகரித்தால் ஏற்பாரா? ராமதாஸ் இப்படி செய்யலாமா? - பொங்கிய மருது! என்னாச்சு?
சிவகங்கை : விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னியரசோ, பாமகவை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்களோ அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எடப்பாடி பழனிசாமியின் அபகரிப்பு அரசியலை விசிக, பாமக, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் ஆதரிக்கக்கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 28ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஓபிஎஸ் தரப்பின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், "அ.தி.மு.கவின் சட்ட விதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே கட்சியின் பொதுச்செயலாளராக ஆக முடியும். இதற்கு முன்பு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தாங்கள் மறைகின்றவரை கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்தனர். அதற்கு காரணம் அவர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டதுதான்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு கொடுத்த அந்த உரிமையை எடப்பாடி பழனிசாமி தட்டிப்பறித்துக் கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அபகரிப்பு அரசியலை கூட்டணிக் கட்சியான பாஜக ஆதரிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கும் இதே வேண்டுகோளை விடுக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னி அரசோ, பாமகவை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்களோ அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதனால் அபகரிப்பு எந்த நிலையில் வந்தாலும் அதனை நிராகரிக்க வேண்டும். கண்டிக்கப்பட வேண்டும் என வேண்டுகிறோம். அப்படி எடப்பாடியை ஆதரிக்கக்கூடிய கட்சிகள் மக்கள் மன்றத்தில் நிராகரிக்கப்படும். நாங்களும் சும்மா விடமாட்டோம்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications