சிவகாசி அருகே கோர சம்பவம்! பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்!
விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று நடந்த எதிர்பாராதவகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலையில் இன்று வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கட்டிடங்கள் இடிந்தன, 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
வெடி விபத்தில் சிக்கிய 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அன்றுதான் செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் மீண்டும் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டு 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications