காமராஜர் 121வது பிறந்தநாள்.. சிவகாசியில் நாளை ரத்ததான முகாம்.. பெண்களும் பங்கேற்க அழைப்பு
சிவகாசி: பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ஜூலை 09ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் நடைபெற உள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்று குருதிக்கொடை கொடுக்க உள்ளனர்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.

930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர் அவர்கள், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார். காமராஜர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளர்ச்சி நாளாகவும், பல்வேறு இடங்களில் கல்வித் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
காமராஜரின் 121வது பிறந்தநாள் வரும் 15ம் தேதி கொண்டாப்படுகிறது. இதனையொட்டி காமராஜர் ரத்ததானக் குழுவும் சிவகாசி அரசு மருத்துவமனையும் இணைந்து 19 ஆண்டுகளாக ரத்ததான முகாம் நடத்தி வருகின்றனர். 20 வது ஆண்டாக வரும் ஜூலை 09ஆம் தேதி ஞாயிறன்று சிவகாசி கேஎஸ்எஸ் பெரிய கருப்ப நாடார், கேஎஸ்எஸ் பழனியப்ப நாடார் கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை ரத்ததான முகாம் நடைபெற உள்ளது. ரத்த தான முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் குடும்பத்தோடு பங்கேற்று ரத்ததானம் முகாம் அளிக்க உள்ளனர். பெண்களும் இந்த முகாமில் தயக்கமின்றி பங்கேற்கலாம் என்று காமராஜர் ரத்ததானக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் 9894845035 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications