சிறுபிள்ளைத்தனமாக பேசும் விஜய்.. தொட்டில் குழந்தை கட்சி தவெக - ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: விஜய் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார். வலுவான அரசியல் இயக்கம் நடத்தும் ஆற்றல் விஜயிடம் இல்லை. ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேலிக்குரியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "விஜய் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக மதுரை மாநாட்டில் விஜயின் நடவடிக்கை இருந்தது. வலுவான அரசியல் இயக்கமாக நடத்தக்கூடிய ஆற்றல் விஜயிடம் இருப்பது போல் தெரியவில்லை.

Vijay TVK Rajendra balaji

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தினசரி ஒரு மாவட்டத்திற்கு சென்று வருகிறார். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத தலைவரை போல விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. 54 ஆண்டுகள் களம் பயின்று 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசுவது விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படியாக உள்ளது.

விஜய்க்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்கும் வாய்ப்பு அவரது பேச்சில் தெரியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து ஏளனமும் நையாண்டியும் பேசினார்கள். ஆனால் தற்போது அவர் மேற்கொண்டு வரும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை பார்த்து ஆளும் திமுக கட்சியினரே மிரண்டு போய் உள்ளது

ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேலிக்குரியது. அவரது பேச்சால் எந்த செயலும் நடக்காது. எங்களை எதிர்த்து யாரும் இல்லை என சொல்லலாம் ஆனால் களத்தில் நிற்க முடியாது. இதே போல் பேசிய அதிகம் பேரை நாங்கள் பார்த்துள்ளோம். அதிமுகவை பற்றி சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் அடையாளம் தெரியாமல் போன வரலாறு உள்ளது. அதிமுகவின் வரலாற்றுக்கு மிகப்பெரிய சரித்திரம் உள்ளது.

அதிமுக எடப்பாடியார் தலைமையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்ற இதைப் பார்த்து பொறாமைப்படும் ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசி நடித்துவிட்டு விஜய் சென்றுள்ளார். விஜய்யின் பேச்சில் அரசியல் கருத்துக்களும் இல்லை, மக்களை கவரக்கூடிய எதிர்கால திட்டமும் இல்லை.

விஜய் விளையாட்டுப் பிள்ளை போல் பேசி வருகிறார். சினிமாவில் என்ன விளையாட்டுத்தனம் செய்வாரோ அதே விளையாட்டு தனத்தை அரசியலிலும் செய்கிறார். அனைவரும் மாநாட்டை முடித்துவிட்டு முன் வாசல் வழியாக செல்வார்கள் ஆனால் விஜய் பின் வாசல் வழியாக செல்கிறார். எந்த வழியாக செல்ல வேண்டும் எந்த வழியாக வரவேண்டும் என்பது கூட தெரியவில்லை. விஜயை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.

மீடியாக்களின் அதீத போக்கஸ் விஜய்க்கு சிக்கலில் முடியப் போகுது. எத்தனையோ பேர் கட்சியை துவக்கினார்கள் யாராவது ஆள முடிந்ததா அதிகாரத்திற்கு வர முடிந்ததா. அந்த "தில்" அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே உள்ளது. கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, வடக்கே உள்ள தலைவர்கள் பேசும்போது மொழிபெயர்க்கும் போது கருத்துக்கள் மாறி சொல்லப்படும் ஏற்கனவே தெளிவாக பேசப்பட்டுள்ளது.

அதிமுக தனி பெரும்பான்மையோடு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார். அதிமுக ஆட்சி தான் அமையும். இதுதான் முடிவு. பாஜக எங்களுக்கு அடுத்த இடத்தில் வருவார்கள். எங்களது கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+